சோடியம் ஐப்போநைட்ரைட்டு(Sodium hyponitrite) என்பது Na2N2O2 அல்லது (Na+)2[ON=NO]2−.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். இரண்டு வகையான ஐப்போநைட்ரைட்டு (N 2O2− 2) அயனிகள் காணப்படுகின்றன. அவை சிசு வடிவம் மற்றும் டிரான்சு வடிவம் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒருபக்க மாற்றியன் மற்றும் மாறுபக்க மாற்றியன் என்பனவாகும். மாறுபக்க மாற்றியன் வடிவம் பொதுவானது என்றாலும் ஒருபக்க மாற்றியனையும் தயாரிக்க முடியும். மாற்பக்க மாற்றியனைவிட ஒருபக்க மாற்றியன் வினைத்திறன் மிக்கதாகும் [1][2].
மாறுபக்க மாற்றியன்
டிரான்சு சோடியம் ஐப்போநைட்ரைட்டு என்ப்படும் மாறுபக்க சோடியம் ஐப்போநைட்ரைட்டு நிறமற்றது. நீரில் கரையக்கூடியது. ஆனால் எத்தனால் மற்றும் ஈதரில் கரையாது [3][4].
மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு 1927 ஆம் ஆண்டு ஏ.டபிள்யூ சிகாட்டு என்பவரால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. அவர் இவ்வினையில் ஆல்க்கைல் நைட்ரைட்டுகள், ஐதராக்சிலமோனியம் குளோரைடு மற்றும் சோடியம் ஈத்தாக்சைடு ஆகிய வேதிப்பொருட்களை வினைபுரியச் செய்தார்[4][8]
RONO + NH2OH + 2 EtONa → Na2N2O2 + ROH + 2 EtOH
டி.மெண்டென்கால் என்பவர் 1974 இல் நைட்ரிக் ஆக்சைடுடன் 1,2-டைமெத்தாக்சியீத்தேனில் உள்ள சோடியம் உலோகம், தொலுயீன் மற்றும் பென்சோபீனோன் ஆகிய வினைப்பொருட்களை வினைபுரியச் செய்து இதை தயாரித்தார். விளைபொருளுடன் பின்னர் நீரை சேர்த்து சோடியம் ஐப்போநைட்ரைட்டு பிரித்தெடுக்கப்பட்டது[9].
சோடியம் நைட்ரைட்டை மின்னாற்பகுப்பு செய்து தயாரிக்கும் முறையிலும் இச்சேர்மத்தை தயாரிக்க முடியும்[10].
நீரேற்றுகள்
மாறுபக்க–சோடியம் ஐப்போநைட்ரைட்டின் பல்வேறு வகையான நீரேற்றுகள் Na 2N 2O 2(H 2O)x அறியப்படுகின்றன. இவற்றில் X- இன் மதிப்பு 2, 3.5, 4, 5, 6, 7, 8, மற்றும் 9 என மாறுபடுகிறது;[3][11][12]. ஆனால் இக்கருத்தில் சில சர்ச்சைகளும் உள்ளன.[13]
நீரேற்றம் அடையும் தண்ணீர் அயனிகளுடன் ஒருங்கிணைவதற்குப் பதிலாக அணிக்கோவையில் சற்று பிடிக்கப்பட்டது போல காணப்படுகிறது[13] நீரேற்றுகளை பாசுபரசு பெண்டாக்சைடில் உலர்த்தி பின்னர் வினைகலவையை 120 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நீரிலி வடிவ சேர்மத்தை தயாரிக்கலாம்.[13].
வினைகள்
மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு கரைசல் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடால் சிதைக்கப்பட்டு சோடியம் கார்பனேட்டு உருவாகிறது.[14].
நீர்ம டைநைட்ரசன் டெட்ராக்சைடு (|N2O4) ]] மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டை ஆக்சிசனேற்றம் செய்து சோடியம் பெராக்சோ ஐப்போநைட்ரைட்டைக்Na2+ 2[ON=NOO]2−) கொடுக்கிறது.[1][15].
ஒருபக்க மாற்றியன்
சிசு-சோடியம் ஐப்போநைட்ரைட்டு எனப்படும் ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு வெண்மையான படிகத் திண்மம் ஆகும். அசிட்டோன் போன்ற புரோட்டான் வழங்கா கரைப்பான்களில் இது கரையாது. மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு போல அல்லாமல் நீர் மற்றும் புரோட்டான் வழங்கும் கரைப்பான்களால் சிதைக்கப்படுகிறது[2]
தயாரிப்பு
திரவ அமோனியாவிலுள்ள சோடியம் உலோகத்தில் நைட்ரிக் ஆக்சைடை (NO) -50° செல்சியசு வெப்பநிலையில் செலுத்தி ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது[1]
கிளாசு பெல்டுமான் மற்றும் மார்ட்டின் யேன்சன் ஆகியோர் 1996 ஆம் ஆண்டில்
சோடியம் ஆக்சைடையும் 77 கிலோபாசுக்கல் அழுத்தத்திலுள்ள சிரிப்பூட்டும் வாயு எனப்படும் நைட்ரசு ஆக்சைடையும்N 2O
ஓரு மூடிய குழாயிலிட்டு சூடுபடுத்தி இரண்டு மணி நேரம் அளவிற்கு 360 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டை தயாரித்தனர். இரண்டு வினையாக்கிகளும் வினைபுரிந்து இவ்வினையில் வெண்மை நிற நுண் படிகங்களைக் கொடுக்கின்றன.[2][8]
பண்புகளும் வினைகளும்
நீரிலி வடிவ ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு உப்பு 325 பாகைசெல்சியசு வெப்பநிலை வரையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. விகிதச்சமனின்றி பிரியும்போது நைட்ரசனையும் சோடியம் ஆர்த்தோநைட்ரைட்டையும் கொடுக்கிறது:[2]
3 Na 2N 2O 2 → 2 Na 3O(NO 2) + 2 N 2
பொதுவாக மாறுபக்க மாற்றியனைவிட ஒருபக்க மாற்றியன் அதிக வினைத்திறன் கொண்ட சேர்மமாக காணப்படுகிறது.[1].
↑ 2.02.12.22.3Claus Feldmann, Martin Jansen (1996), "cis-Sodium Hyponitrite - A New Preparative Route and a Crystal Structure Analysis". Angewandte Chemie International Edition in English, volume 35, issue 15, pages 1728–1730. எஆசு:10.1002/anie.199617281
↑ 3.03.1Trambaklal Mohanlal Oza, Rajnikant Hariprasad Thaker (1955), "The Thermal Decomposition of Silver Hyponitrite". Journal of the American Chemical society, volume 77, issue 19, pages 4976–4980. எஆசு:10.1021/ja01624a007
↑Addison, C. C.; Gamlen G. A.; Thompson, R. (1952). "70. The ultra-violet absorption spectra of sodium hyponitrite and sodium α-oxyhyponitrite : the analysis of mixtures with sodium nitrite and nitrate". J. Chem. Soc.: 338. doi:10.1039/jr9520000338.
↑Neumann, R. C., Jr. Bussey, R. J. (1970). "High pressure studies. V. Activation volumes for combination and diffusion of geminate tert-butoxy radicals". J. Am. Chem. Soc.92 (8): 2440. doi:10.1021/ja00711a039.
↑Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN0080379419.
↑ 8.08.1Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 15: The group 15 elements". Inorganic Chemistry (3rd ed.). Pearson. p. 468. ISBN978-0-13-175553-6.
↑G. David Mendenhall (1974), "Convenient synthesis of silver hyponitrite". Journal of the American Chemical society, volume 96, issue 15, page 5000. எஆசு:10.1021/ja00822a054
↑Polydoropoulos, C. N. Chem. Ind. (London) 1963, 1686 and references therein.
↑James Riddick Partington and Chandulal Chhotalal Shah (1931), "Investigations on hyponitrites. Part I. Sodium hyponitrite: preparation and properties". Journal of the Chemical Society (Resumed), paper CCLXXXII, pages 2071-2080. எஆசு:10.1039/JR9310002071
↑ 13.013.113.2Gary L. Stucky, Jack L. Lambert, R. Dean Dragsdorf (1969), "The hydrates of sodium hyponitrite". Journal of Inorganic and Nuclear Chemistry, volume 31, issue 1, pages 29–32 எஆசு:10.1016/0022-1902(69)80050-3
↑Charlotte N. Conner, Caroline E. Donald, Martin N. Hughes, Christina Sami (1989), "The molar absorptivity of sodium hyponitrite". Polyhedron, volume 8, issue 21, pages 2621-2622. எஆசு:10.1016/S0277-5387(00)81166-3
↑M. N. Hughes and H. G. Nicklin (1969), "The action of dinitrogen tetroxide on sodium hyponitrite".
Journal of the Chemical Society D: Chemical Communications, volume 1969, issue 2, page 80a. எஆசு:10.1039/C2969000080A