சோடியம் சிட்ரேட்டுசோடியம் சிட்ரேட்டு (Sodium citrate) என்பது சிட்ரிக் அமிலத்தின் பின் வரும் சோடியம் உப்புகளில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கலாம்.
முச்சோடியம் சிட்ரேட்டு பொதுவாக சோடியம் சிட்ரேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இம்மூன்று உப்புகளும் கூட்டாக உணவுக் கூட்டுப்பொருள் வகையில் ஐரோப்பிய ஒன்றிய எண் 331 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படுகிறது. பயன்பாடுகள்உணவுசோடியம் சிட்ரேட்டுகள் உணவு மற்றும் பானங்களில் அமிலத்தன்மை கட்டுப்பாட்டாளர்களாகவும், எண்ணெய்களுக்கான குழம்பாக்கிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பாலாடைக்கட்டிகளை எண்ணெய்தன்மை ஆகாமல் உருகச் செய்கின்றன. சோடியம் சிட்ரேட்டு உணவின் அமிலத்தன்மையையும் குறைக்கிறது. இரத்தம் உறைதல் தடுப்பிதானம் செய்யப்பட்ட இரத்தம் சேமிக்கப்படும்போது இரத்தம் உறைவதை தடுக்க சோடியம் சிட்ரேட்டு பயன்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு முன், ஒரு நபரின் இரத்தம் மிகவும் தடிமனாக உள்ளதா மற்றும் இரத்த உறைவு ஏற்படுமா அல்லது பாதுகாப்பாக செயல்பட முடியாத அளவுக்கு இரத்தம் மிகவும் மெல்லியதாக உள்ளதா என்பதைக் கண்டறிய சோடியம் சிட்ரேட்டு ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் சிட்ரேட்டு, சோடியம் பைகார்பனேட்டுக்குப் பதிலாக[1], இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்க, மருத்துவச் சூழல்களில் ஒரு காரமயமாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[2] வளர்சிதைமாற்றத்தில்வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை[3] மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்[4] சிகிச்சைக்கான பயன்பாடு என சோடியம் சிட்ரேட்டு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பெரசு நுண்துகள்ஒலியிக்கு அமிலத்துடன் சோடியம் சிட்ரேட்டு காந்த Fe3O4 நானோ துகள்கள் மேற்பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia