சோடியம் டெட்ராதயோனேட்டு
சோடியம் டெட்ராதயோனேட்டு (Sodium tetrathionate) என்பது Na2S4O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். சோடியமும் டெட்ராதயோனேட்டும் சேர்ந்து உருவாகும் ஓர் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. நீரேற்றுகளாகவும் காணப்படும் என்பதால் பெரும்பாலும் Na2S4O6xH2O என்ற பொதுவாய்ப்பாட்டால் சோடியம் டெட்ராதயோனேட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்த உப்பு பொதுவாக இருநீரேற்றாகப் (x = 2) பெறப்படுகிறது. நிறமற்றதாகவும் நீரில் கரையக்கூடியதாகவும் உள்ள திடப்பொருளாகவும் காணப்படுகிறது. பாலிதயோனேட்டுகளின் ஓர் உறுப்பினராக சோடியம் டெட்ராதயோனேட்டு இடம்பெறுகிறது. பாலிதயோனேட்டுகள் [Sn(SO3)2]2- என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. டிரைதயோனேட்டு (n = 1), பெண்டாதயோனேட்டு (n = 3), எக்சாதயோனேட்டு (n = 4) ஆகியவை மற்ற உறுப்பினர்களில் அடங்குகின்றன.[1] தயாரிப்புஅயோடினின் செயல்பாடு மூலம் சோடியம் தயோசல்பேட்டின் (Na2S2O3) ஆக்சிசனேற்றத்தால் சோடியம் டெட்ராதயோனேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]
இந்த வினை அயோடினின் நிறமாற்றத்தால் குறிக்கப்படுகிறது. இந்த வினையே அயோடோமெட்ரிக் தரம்பார்த்தலின் அடிப்படையாகும். சோடியம் பைசல்பைட்டை டைசல்பர் டைகுளோரைடுடன் சேர்த்து இணைப்பு வினைக்கு உட்படுத்துவது மற்றொரு முறையாகும்.
இந்த அயனி H2S2 அயனியைப் போலவே சிறந்த C2 சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது. S-S-S இருமுக கோணம் கிட்டத்தட்ட 90° ஆகும். மைய S-S பிணைப்பு தூரம் 2.115 Å, மற்ற இரண்டு S-S தூரங்களை விடவும், பெரும்பாலான பாலிசல்பேன்களில் உள்ள அந்த தூரங்களை விடவும் 0.01 Å அதிகமாகும்.[2] ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia