சோடியம் மிகையாக்சைடு
சோடியம் மிகையாக்சைடு (Sodium superoxide ) என்பது NaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் திண்மமாக உள்ள இது, மிகையாக்சைடு எதிர்மின் அயனி உப்பாகும். ஆக்சிசனால் சோடியத்தை ஆக்சிசனேற்றம் செய்யும்போது இச்சேர்மம் இடைநிலையாகத் தோன்றுகிறது. தயாரிப்புசோடியம் பெராக்சைடை உயர் அழுத்தத்தில் ஆக்சிசனுடன் வினைப்படுத்துவதன் மூலம் சோடியம் மிகையாக்சைடு தயாரிக்க முடியும்:[1] Na2O2 + O2 → 2 NaO2 அமோனியாவிலுள்ள சோடியக் கரைசலை கவனமுடன் ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாகவும் சோடியம் மிகையாக்சைடு தயாரிக்க முடியும். Na(NH3 வில்) + O2 → NaO2 பண்புகள்எதிர்பார்த்தது போல ஆக்சிசனின் எதிர்மின் அயனி உப்பாக இருப்பதால் இது ஒரு இணை காந்தமாகும். இது உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு சோடியம் ஐதராக்சைடு, ஆக்சிசன் மற்றும் ஐதரசன் பெராக்சைடு கலந்த கலவையைத் தருகிறது[2]. இச்சேர்மம் சோடியம் குளோரைடு ஒத்த வடிவமைப்பில் படிகமாகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia