சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு
சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு (Sodium trichloroacetate) என்பது C2Cl3NaO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டிரைகுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. CCl3CO2Na என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். ஒரு குரோமோசோமில் மரபணுக்களைக் கண்டறியும் செயல்முறையில் படியெடுக்கும்போது உணர்திறன் மற்றும் துல்லியத்தை அதிகரிக்க இச்சேர்மம் பயன்படுகிறது.[1] முன்னதாக சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு 1950 ஆம் ஆண்டுகளில் களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கட்டுப்பாட்டாளர்கள் அதை 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் சந்தையில் இருந்து அகற்றினர். [2][3][4] தயாரிப்புமுக்குளோரோ அசிட்டிக் அமிலத்துடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
வினைகள்காரத்தன்மைசோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு சோடியம் அசிட்டேட்டை விட பலவீனமான ஒரு காரமாகும். ஏனெனில் முக்குளோரோமெத்தில் குழுவின் எலக்ட்ரான்-திரும்புதல் இயல்பு இதற்கு காரணமாகும். இதேபோல சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டும் பலவீனமான ஒரு காரணமாகும். இருப்பினும், பொருத்தமான வலுவான அமிலங்களின் முன்னிலையில் இது எளிதில் புரோட்டானேற்றம் அடையும்.
எதிர்மின் அயனி முன்னோடிசோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு வினையாக்கி முக்குளோரோமெத்தில் குழுவை மற்ற மூலக்கூறுகளில் அறிமுகப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். கார்பாக்சில் குழு நீக்கத்தின் போது இது முக்குளோரோமெத்தில் அயனியை உருவாக்குகிறது. முக்குளோரோமெத்தில் அயனி ஆல்டிகைடுகள், கார்பாக்சிலிக் அமில நீரிலிகள்,[5] கீட்டோன்கள் (இயோசிக்கு-ரீவ் வினைக்கு முன்னோடியாக அமைவது) மற்றும் அசைல் ஆலைடுகள் போன்ற பல்வேறு கார்பனைல் செயல்பாட்டுக் குழுக்களைத் தாக்குவதற்குப் போதுமான வலுவான அணுக்கருகவரி ஆகும் இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia