சோடோகான்
சோடோகான் (松濤館流 | Shōtōkan-ryū) என்பது கராத்தேயிலுள்ள பல வகைகளில் ஒன்றாகும். ஜியின் புனாகோசி (1868–1957) மற்றும் அவருடைய மகன் ஜிகோ புனாகோசி (1906–1945) என்பவர்களால் பல சண்டைக் கலைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட கராத்தேயின் ஒரு வகையே சோடோகான் கராத்தே ஆகும். ஜியின் ஓக்கினாவாவில் பிறந்தார்.[1] இவருடைய பகிரங்க செயன் முறை, பல வகை கராத்தே முறைகளை பல்கலைக்கழக கராத்தே கழகங்களில் வளர்த்தல் போன்ற கராத்தே பிரபல்யப்படுத்தும் செயற்பாடுகளுக்காக பரந்தளவில் பாராட்டுப் பெற்றவர்.[2] பல்கலைக்கழக கராத்தே கழகங்கள் மற்றும் வெளியிட கராத்தே பயிலகங்களில் ஜியின் பல மாணவர்களைக் கொண்டிருந்தார். கராத்தே பயிலகங்கள் அவருடைய மரணத்திற்குப் பிறகும் (1957) தொடர்ந்து கற்பித்தன. ஆயினும், உள்ளே காணப்பட்ட ஒத்துப் போகாத தன்மைகள் பல பிரிவு நிறுவனங்களை உருவாக்கியது. ஜப்பான் கராத்தே சங்கம் மற்றும் சோடோகாய் ஆரம்பத்தில் பிரிந்ததும், அதன் தொடர்ச்சியாக பல பிரிவுகள் உருவாகின. இன்று தனியொரு சோடோகான் கராத்தே பயிலகம் பாடசாலை இல்லை. இருந்தபோதிலும் அவை ஜியின் புனாகோசியின் தாக்கத்தைக் கொண்டுள்ளன. முதலாவதும் பெரிய வகையான கராத்தே வகைகளில் சோடோகான் கராத்தேயின் தாக்கம் கொண்ட முறையும் பாரம்பரியமிக்கதுமாக கருதப்படுகிறது. சொல்லிணக்கம்சோடோகான் ஜியின் உருவாக்கிய முதலாவது கராத்தே பயிலகத்தின் பெயராகும். மெஜிரோவில் 1939[3] இல் உருவாக்கப்பட்ட இது 1945 நேசநாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சில் அழிந்தது.[4] சோடோ என்றால் தேவதாரு அலை (காற்று வீசும்போது ஏற்படும் தேவதாரு ஊசிபோன்ற இலை முனைகளின் நகர்வு). இது அவருடைய புனைபெயராகவும் இருந்தது.[5] இப்பெயரை தன்னுடைய மாணவர்களுக்கான செய்தி, கவிதை மற்றும் மெய்யியல் எழுத்துக்களின்போது பாவித்தார். கான் என்பதன் அர்த்தம் வீடு அல்லது மண்டபம் என்பதாகும். தங்கள் குருவை கௌரவப்படுத்த அவருடைய மாணாவர்கள் சோடோ-கான் எனும் அடையாளத்தை உருவாக்கி, ஜியின் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த மண்டபத்தின் வாசலின்மேல் வைத்தனர்.[5] தனிச் சிறப்புகள்சோடோகான் பயிற்சியானது அடிப்படை, நகர்வின் அமைப்பு (காட்டா), சண்டை ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia