சோமாலிப் பிரதேசம்
சோமாலிப் பிரதேசம் (Somali Region)[2][3]கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் கிழக்கில் அமைந்துள்ளது. இது ஒரோமியாவிற்கு, பரப்பளவில் இரண்டாவது பெரிய பிரதேசம் ஆகும். [4] சோமாலிப் பிரதேசத்தின் தலைநகரம் ஜிஜிகா நகரம் ஆகும்.[5]சோமாலிப் பிரதேசத்திற்கு என தனி சட்டமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் ஆளுநர் உள்ளனர். அமைவிடம்சோமாலிப் பிரதேசத்திற்கு வடமேற்கில் அபார் பிரதேசம், மேற்கில் ஒரோமியா பிரதேசம் மற்றும் திரே தாவா நகரமும், வடக்கில் திஜி பௌட்டி மற்றும் சோமாலிலாந்து நாடுகளும், கிழக்கிலும், தெற்கிலும் சோமாலியாவும், தென்மேற்கில் கென்யாவும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. [6] மக்கள் தொகை பரம்பல்![]() 2007-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சோமாலிப் பிரதேசம் 74,45,219 மக்கள் தொகை கொண்டிரந்தது. அதில் ஆண்கள் 3,472,490 மற்றும் பெண்கள் 3,972,729 ஆக இருந்தனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 20.9 பேர் வீதம் வாழ்ந்தனர். மக்கள் தொகையில் 80% கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடியினர் ஆவார். இப்பிரதேச மக்களில் சோமாலி மக்கள் 99.2%, ஒரோமியா ம்க்கள் 0.46%, வெளிநாட்டில் பிறந்த சோமாலி மக்கள் 0.20% மற்றும் பிறர் 0.08% ஆக உள்ளனர். 2017-ஆம் ஆண்டில் சோமாலிப் பிரதேசத்தின் மக்கள் தொகை 1,17,48,998 ஆக உயர்ந்துள்ளது.[7]சோமாலிப் பிரதேசத்தில் 8 பெரிய அகதிகள் முகாம்களும், ஒரு அகதிகள் இடைநிலை மையமும உள்ளது. சோமாலியா நாட்டிலிருந்து வந்த 212,967 சோமாலிய அகதிகளுக்கு இப்பிரதேசத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள்து. மொழிகள்இப்பிரதேசத்தில் சோமாலி மொழி 99.92% மக்களால் பேசப்படுகிறது. ஒரோமோ மொழி 0.07% மக்களாலும், அம்காரியம் 0.1% மக்களாலும் பேசப்படுகிறது. சமயம்சோமாலிப் பிரதேசத்தில் சன்னி இசுலாம் சமயத்தை 99.4% மக்களால் பயிலப்படுகிறது. 0.50% மக்கள் பழைமைவாத கிறித்துவமும், 0.10% மக்கள் பிற கிறித்துவப் பிரிவுகளை பயில்கின்றனர்.[8] வேளாண்மை![]() இப்பிரதேச மக்கள் ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற 1, 459,720 கால்நடைகளைக் கொண்டுள்ளனர். இது எத்தியோப்பிவின் மொத்த கால்நடைகளில் 10.19% ஆகும். கால்நடைகளை மேய்க்கும் மக்கள் அதிகம் கொண்டதால் வேளாண்மை இப்பிரதேசத்தில் குறைவே ஆகும்:[9] நிர்வாக மண்டலங்கள்![]() சோமாலிப் பிரதேசம் நிர்வாக வசதிக்காக 11 நிர்வாக மண்டலங்களாகவும், 3 சிறப்பு நிர்வாக மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[10]இந்த மண்டலங்கள் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
நகரங்கள்இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia