சோலோனிய அரசியலமைப்புசோலோனிய அரசியலமைப்பு (Solonian Constitution) என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதென்சுக்காக சோலோனால் உருவாக்கப்பட்டதாகும்.[1] சோலோனின் காலத்தில், மக்கள் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக ஏதெனியன் அரசு கிட்டத்தட்ட துண்டு துண்டாகிவந்தது. திராகோவின் பழைய சட்டங்களைத் திருத்த அல்லது ஒழிக்க சோலன் விரும்பினார். அவர் குடிமை மற்றும் தனிநபர் வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய சட்டங்களின் கோட்பாட்டை அறிவித்தார், அதன் நன்மையால் ஏற்பட்ட விளைவுகள் என்பது [2] அவரது அரசியலமைப்பின் முடிவுக்குப் பிறகும் நீண்ட காலம் நீடித்தது. சோலனின் சட்ட சீர்திருத்தங்களின் படி, விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் கடனுக்காக அடிமையாக்கபட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பண்ணையடிமை முறையில் வேளாண்மை செய்த ஹெக்டெமோரோய் ("ஆறில் ஒரு பங்கு தொழிலாளர்கள்") என்ற நிலையும் நீக்கப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள் சீசாச்சியா என்று அழைக்கப்பட்டன.[3] சோலனின் அரசியலமைப்பானது, பிறப்பின் அடிப்படையை விட செல்வ நிலையை அரசியல் பதவிகளை வகிப்பதற்கான அளவுகோலாக மாற்றினார். அதன் மூலம் பழைய பிரபுத்துவத்தின் அதிகாரம் குறைத்தது, இது திமோக்ராட்டியா (செல்வர் ஆட்சி) எனப்படும் அமைப்பாகும். குடிமக்கள் தங்கள் நிலங்களில் செய்யும் உற்பத்தியின் அடிப்படையில் பென்டாகோசியோமெடிம்னோய், ஹிப்பிஸ், ஜீகிடே, தீட்ஸ் என்னும் நான்கு பிரிவினராக பிரிக்கப்பட்டனர்.[4] கீழவைக்கு மேல்முறையீடுகளை கேட்கும் உரிமை வழங்கப்பட்டது, மேலும் சோலோன் மேலவையையும் உருவாக்கினார். இவை இரண்டும் அரியோபகாகு பிரபுத்துவ அவையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்தன. சோலன் வைத்திருந்த கொடூரமான அரசியலமைப்பின் பகுதிகள் கொலை தொடர்பான சட்டங்கள் மட்டுமே ஆகும். அரசியலமைப்பு கவிதையாக எழுதப்பட்டது. அது அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சோலன் பத்து வருடங்கள் தன்னைத்தானே நாடுகடத்திக்கொண்டார். அதனால் அவர் ஒரு சர்வாதிகாரியாக அதிகாரத்தை கையில் எடுக்க ஆசைப்படவில்லை என்று காட்டினார். வகுப்புகள்பெண்டாகோசியோமெடிம்னோய்பெண்டாகோசியோமெடிம்னி அல்லது பெண்டகோசியோமெடிம்னோய் ( கிரேக்கம்: πεντακοσιομέδιμνοι ) என்பவர்கள் உயர்நிலை குடிமக்களாக வகைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சொத்து அல்லது பண்ணையைக் கொண்டு ஆண்டுக்கு 500 மெடிம்னோஸ் (ஒரு மெடிம்னோஸ் என்பது தோராயமாக 71.16 லிட்டருக்கு சமம்) தானியத்தை (அல்லது அதற்கு சமமானவை) உற்பத்தி செய்யக்கூடியவர்கள். அவர்கள் ஏதென்சில் அரசாங்கத்தின் அனைத்து உயர் பதவிகளையும் பெற தகுதி பெற்றனர். இவை எல்லாம்:
பென்டாகோசியோமெடிம்னோய் ஏதெனிய இராணுவத்தில் ஜெனரல்களாக பணியாற்ற முடியும். இப்பிசுநான்கு சமூக வகுப்புகளில் இப்பியசு இரண்டாவது உயர்ந்த பிரிவாகும். அவர்களின் ஆண்டு வருவாய் குறைந்தபட்சம் 300 மெடிம்னோய் ( ஒரு மெடிம்னோய் என்பது தோராயமாக 71.16 லிட்டருக்கு சமம்) தானியம். அல்லது அதற்கு இணையான வருவாய் கொண்ட ஆடவர்களால் ஆனது. சூகிடேசூகிடே ( கிரேக்கம்: ζευγῖται ) அல்லது zeugitai என்பது ஒரு ஆண்டுக்கு 200 மெடிம்னோய் ( ஒரு மெடிம்னோய் என்பது தோராயமாக 71.16 லிட்டருக்கு சமம்) தானியம். அல்லது அதற்கு இணையான வருவாயை தரக்கூடிய சொத்து அல்லது பண்ணையைக் கொண்டிருப்பவர் ஆவார்.[சான்று தேவை] இந்தச் சொல்லானது "யோக்" என்பதற்கான கிரேக்க சொல்லிலிருந்து வந்ததாகத் தோன்றுகிறது. ஜுகிடே என்பது எருதுகளின் நுகத்தடியை வாங்கக்கூடிய மனிதர்கள் அல்லது ஃபாலன்க்ஸில் "ஒன்றாக இணைக்கப்பட்ட" மனிதர்கள்-அதாவது ஆண்கள் என்று நவீன அறிஞர்கள் முடிவு செய்ய வழிவகுத்தது. அவர்கள் தங்களுக்கு சொந்தமாக ஹாப்லைட் கவசத்தை வாங்க முடியக்கூடியவர்கள்.[5] சூகிடே ஏதெனியன் இராணுவத்தில் அப்லைட்டுகளாக பணியாற்ற முடியும். அந்த வகையில் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள போதுமான பணம் இருப்பவர்கள். அதாவது வருடத்திற்கு 200 மெடிம்னோய் அல்லது அதற்கும் அதிகமாக பொருள் ஈட்ட முடிபவர்கள். சோலனின் சீர்திருத்தங்களின் போது, சில சிறிய அரசியல் பதவிகளை வகிக்கும் உரிமை சூகிடேக்களுக்கு வழங்கப்பட்டது.[6] அவர்களின் தகுதி நிலை பல ஆண்டுகளாக உயர்ந்தது; கி.மு. 457/6 இல் ஆர்கோன் பதவியை அடைவதற்கான உரிமை வழங்கப்பட்டது,[7] மேலும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில குழுக்கள் சிலவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று வாதிட்டனர். அதில் ஹாப்லைட் அந்தஸ்து அல்லது அதற்கு மேல் உள்ள அனைத்து ஆடவர்களும் உரிமை உள்ளளவர்களா இருக்கவேண்டும் எனப்படது. அத்தகைய ஆட்சி உண்மையில் கிமு 411 ஏதெனியன் புரட்சியின் போது நிறுவப்பட்டது.[8] சூகிடேக்கள் ஏதெனிய அரசாங்கத்தின் சில பதவிகளுக்கு தகுதி பெற்றனர்:
தீட்சுதீட்சு ( கிரேக்கம்: θῆτες , thêtes) குடிமக்களில் மிக அடித்தட்டு சமூக வகுப்பினர். தீட்சுகள் கூலிக்கு வேலை செய்பவர்கள் அல்லது ஆண்டு வருமானமாக 200 மெடிம்னோய் தானித்துக்கும் (அல்லது அதற்கு சமமான) வருவாய் உள்ளவர்கள். இந்த வேறுபாடு கிமு 594/593 க்கு முந்தைய காலத்திலிருந்து கிமு 322 வரை நீடித்தது.[சான்று தேவை] தீட்சுகள் சூகிடே என தகுதி பெறாத குடிமக்கள் என வரையறுக்கப்பட்டது. சோலோனிய சீர்திருத்தங்களுக்கு முன்னரே தீட்சுகள் இருந்திருக்கலாம். அவர்கள் எக்லேசியாவில் (ஏதெனியன் அவை) பங்கேற்கலாம், மேலும் எலியாயாவின் கீழவையில் பணியாற்றும் நீதிபதியாக இருக்கலாம், ஆனால் பூலி அவையில் பணியாற்றவோ அல்லது அதில் நீதிபதிகளாக பணியாற்றவோ அனுமதிக்கபடவில்லை.[சான்று தேவை] கிமு 460-450 இல் எபியால்ட்டீஸ் மற்றும் பெரிக்கிள்சின் சீர்திருத்தங்களின் வழியாக, அரசு அலுவலகத்தில் பணிபுரிய தீட்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.[9] லாமியன் போரில் ஏதெனியன் தோல்விக்குப் பிறகு 12,000 தீட்டுகள் உரிமை மறுக்கப்பட்டு நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் அனைத்து தீட்சுகளும் வெளியேற்றப்பட்டார்களா அல்லது ஏதென்சை விட்டு வெளியேற்றப்பட தீட்சுகள் போக, மீதமுள்ள தீட்சுகள் தொடர்ந்து தங்கினார்ளா என்பது குறித்து அறிஞர்களிடையே விவாதம் உள்ளது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia