சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி (Sholinganallur Assembly constituency), செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 27. முன்னர் தாம்பரம் தொகுதியில் இருந்த பகுதிகளைப் பிரித்து சோளிங்கநல்லூர் தொகுதி உருவானது. இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தாம்பரம் வட்டம் (பகுதி) நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழுதிவாக்கம் (உள்ளகரம்) (நகராட்சி), பெருங்குடி (பேரூராட்சி),கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம் துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி). [2]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி, 6,24,405 வாக்காளர்கள் உள்ளனர்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia