சோவலூர் சிவன் கோயில்
![]() சோவலூர் சிவன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . [1] கோயிலின் மூலவரான சிவன் கருவறையில் மேற்கு நோக்கி உள்ளார். முனிவர் பரசுராமர் இந்த மூலவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. இக்கோயில் கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றாகவும், குருவாயூரைச் சுற்றியுள்ள ஐந்து சிவன் கோயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. [2] கோயில்ல் வளாகத்திற்குள் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். சிவபெருமானுக்கு தினமும் மூன்று கால பூசைகள் நடத்தப்படுகின்றன; சிவராத்திரி மற்றும் அஷ்டமி ரோகிணி ஆகியவை கோயிலின் முக்கிய திருவிழாக்களாகும். ![]() கோயில் அமைப்புஇக்கோயில் சுமார் 4 ஏக்கர் நிலத்தைக் கொண்டுள்ளது. அதில் ஒரு ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் மதில் சுவரையொட்டி கோபுரங்கள் கட்டப்படவில்லை. கோயிலில் எவ்வித திருவிழாவும் இல்லாததால் கொடிமரம் இல்லை. பலிகல்புராவில் உள்ள முக்கிய பலிகல்லு சுமார் 10 அடி உயரம் கொண்டதாகும். ஆதலால் வெளியில் இருந்து பார்க்கும்போது சிவலிங்கத்தைக் காணமுடியாது. கோயிலின் வடமேற்கில், கிழக்கு நோக்கிய சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது. 2001 ஆம் ஆண்டு திருப்பணியின் ஒரு பகுதியாக சுப்ரமணியர் கோயில் கட்டப்பட்டது. மூலவர் கருவறை வட்ட வடிவில் இரண்டு தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. கருவறையின் இரண்டாவது கூரை தாமிரத்தகட்டால் வேயப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.[3] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia