சோவ்ரா தீவு
சோவ்ரா தீவு ( Chowra ) என்பது இந்தியாவின், அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்தியப் கடலில், தெரெசா தீவுக்கு வடக்கிலும் பட்டி மலாவ் தீவுக்கு தெற்கில் இந்தியப்பெருங்கடலில் உள்ளது. இத்தீவு சோவ்ரா, டாடாட், சனின்யோ என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.[1] இத்தீவு 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டது.[2] நிலவியல்இத்தீவு இயல்பாக சமவெளியாக இருந்தாலும் அதன் தெற்கு இறுதியில் 104,5 மீ உயர் பாறை மேட்டுநிலம் உள்ளது. பவள பாறைத் திட்டுகள் தீவின் வடமேற்கு பகுதியில் இருந்து சுமார் 1.5 மைல்கள் நீண்டிருக்கின்றன.[3] மக்கள் வகைப்பாடுஇத்தீவில் நான்கு கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களும் தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன அவை அல்ஹியட், சொங்கமொங், குய்டசுக், ரைஹியோன், டஹைலா ஆகும். 2011 மக்கள் காணக்கெடுப்பின்படி, 1336 மக்கள் இத்தீவில் வாழ்கின்றனர். 2011 மக்கள் கணக்கெடுப்பின்படி, 1270 மக்கள் இத்தீவிலுள்ள ஐந்து கிராமங்களில் வாழ்கின்றனர்:[4]
பண்பாடுஇத்தீவு மக்களில் ஐந்து குலங்கள் உள்ளன. ஒ்வோராண்டும் ஒவொரு குலமும் சுழற்சி முறையில் தன் பொறுப்பில் மூன்றுவார பன்றித் திருவிழாவை ஏற்று நடத்துகின்றன. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பல மாதங்கள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளில் பிற குலத்தவர்களும் உதவுகின்றனர். இத்திருவிழா முன்னோர்களின் நினைவாக வடகிழக்கு காற்று தொடங்கிய நேரத்தில் நடக்கிறது.[5]:131 திருவிழா முடிவில் ஒரு கேனோ இனம், பாடல் மற்றும் நடனத்துடன் நிறவு பெறுகிறது.[5]:4 மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia