சோ. சத்தியசீலன்
சோ. சத்தியசீலன் (ஆங்கிலம்: So. Sathiyaseelan) (14 ஏப்ரல் 1933 - 9 ஜூலை 2021) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞராவார்.[1] பட்டிமன்றப் பேச்சாளர், சமயச் சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வயது முதிர்வின் காரணமாக 2021 ஜூலை 9 ஆம் நாள் திருச்சியில் காலமானார்.[2] இளமைக்காலம்1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 இல் பெரம்பலூர் நா. சோமசுந்தரம், மீனாம்பாள் இணையரின் மகனாகப் பிறந்தவர்.[3] பொருளியலில் இளங்கலைப் பட்டமும் பி.டி. பட்டமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் சமூகவியலிலும் முதுகலைப் பட்டமும் பெற்றார். "வள்ளலாரின் சமுதாய ஆன்மீகக் கொள்கைகள்" எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] வள்ளலார் குறித்த இவரது உரை 6 ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளது.[4] தமிழ்ப் பணிதிருச்சி ஈ. ஆர். உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழாசிரியராகவும் திருச்சி தேசியக் கல்லூரியில் எட்டு ஆண்டுகளும், உருமு தனலட்சுமி கல்லூரியில் எட்டு ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உருமு தனலட்சுமி கல்லூரியில் பத்து ஆண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[4] பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும், அதே பல்கலைக்கழக முதலாவது பாடத் திட்டக் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணி ஆற்றியுள்ளார். திருச்சி மாவட்ட நலப்பணிகள் குழு, கி.ஆ.பெ. விசுவாதம் பள்ளி, உருமு தனலட்சுமி பள்ளி உள்ளிட்டவற்றில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ் மாநாடுகளுக்காக இரண்டு முறை அமெரிக்காவிற்கும் இரண்டு முறை கனடாவுக்கும் , ஐந்துமுறை இலங்கைக்கும், நான்கு முறை சிங்கப்பூருக்கும், இரண்டு முறை மலேசியாவுக்கும் சென்று வந்துள்ளார். குவைத்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். படைப்புகள்நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் மூன்று நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.[5]
பெற்ற விருதுகளும் பட்டங்களும்குன்றக்குடி அடிகளாரிடம் நாவுக்கரசர் பட்டத்தைப் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி (2011), சொல்லின் செல்வர் (2015) விருதுகளைப் பெற்றவர். இலக்கிய அமைப்புகளிடம் இருந்து கம்பக் காவலர் விருது, கம்பன் புகழ் விருது, சடையப்ப வள்ளல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.[1] தமிழ்ஞான வாரிதி, செஞ்சொற் செவ்வேள், இயற்றமிழ் வித்தகர், சமய இலக்கியப்பணிச் சுந்தரர், நற்றமிழ்வேள், கம்பன் காவலர், சொற்றமிழ்ச் சக்கரவர்த்தி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.[சான்று தேவை] 2024 நவம்பரில் இவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கி, பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia