சௌதாலா, சிர்சா
சௌதலா (Chautala) இந்தியாவின் அரியானாவில் உள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள தப்வாலி மண்டலத்தில் சிர்சாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.[1] அரியானாவின் முன்னாள் முதலமைச்சர்களான தேவி லால் மற்றும் ஓம் பிரகாசு சௌதாலா ஆகியோர் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். 1919 ஆம் ஆண்டில் இவர்களுடைய மூதாதையர்கள் சௌதாலா கிராமத்தில் குடியேறி வாழ்ந்தனர்.[2] கிராமத்தில் ஒரு மருத்துவமனை, ஒரு தொழில்துறை பயிற்சி நிறுவனம், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள், சீத்தல் உயர்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி, இரண்டு விளையாட்டு அரங்கங்கள் மற்றும் இரண்டு வங்கிகள் உள்ளன.[3] 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான குயின்சு பேட்டன் தொடரோட்டம் இந்த கிராமத்தின் வழியாக சென்றது.[4] 51 ஆவது மூத்த தேசிய கைப்பந்து வெற்றியாளர் போட்டி 2002 ஆம் ஆண்டில் சௌதாலாவின் சௌத்ரி சாகிப் ராம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia