ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி
ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி அல்லது மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை (Janathipathiya Samrakshana Samithy-JSS) இந்தியாவின் கேரள மாநில அரசியல் கட்சியாகும். இக் கட்சி 1994 இல் கே. ஆர். கௌரி அம்மாவால் தோற்றுவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இக் கட்சியைப் புதிதாகத் தோற்றுவித்தார். இந்திய தேசிய காங்கிரசின் தலைமையில் கேரளாவில் அமைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இக் கட்சி ஒரு உறுப்புக் கட்சியாக இணைந்தது. 2001 இல் நடந்த கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத் தேர்தலில் அரூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரி அம்மா, ஏ. கே. அந்தோணியின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தலைமைஇக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. ஆர். கௌரி அம்மா; மாநிலத் தலைவர் ஏ. என். ராஜன்பாபு; வி. ஹெச். சத்ஜித் மற்றும் என். என். சதானந்தனும் கட்சியின் மாநிலச் செயலாளர்கள். நடத்தாளர்
அமைப்புகள்
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia