ஜவஹர் கலா கேந்திரா, ஜெய்ப்பூர்![]() ஜவஹர் கலா கேந்திரா (Jawahar Kala Kendra) (ஜே.கே.கே) என்பது இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பல்கலை மையம் ஆகும். ராஜஸ்தானின் கலை மற்றும் கைவினைப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ராஜஸ்தான் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இந்த மையம் எட்டு பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது. அவற்றில் அருங்காட்சியகங்கள், ஒரு ஆம்பி தியேட்டர் மற்றும் உள் அரங்கம், நூலகம், கலை காட்சி அறைகள், சிற்றுண்டிச்சாலை, சிறிய விடுதி மற்றும் கலை-ஸ்டுடியோ போன்ற பிரிவுகள் அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு நிரந்தர கலைக்கூடங்களும் மற்ற மூன்று காட்சியகங்களும் உள்ளன. ஒவ்வொரு இந்த மையம் சொந்தமாக நாடக விழாவினை நடத்தி வருகிறது. கட்டிடக்கலைஇந்த மையத்திற்கான வடிவமைப்பு பிரபல கட்டிடக் கலைஞர் சார்லஸ் கொரியா 1986 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் கட்டிடம் பயன்படுத்தும் நிலைக்குத் தயாராக அமைந்தது. [2] இந்த மையத்திற்கான திட்டம் ஜெய்ப்பூரின் அசல் நகர திட்டத்தின் தூண்டுதலால் அமைந்த ஒன்றாகும். ஒன்பது சதுரங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்த அமைப்பில் காணப்படுகின்ற மத்திய சதுரம் திறந்த நிலையில் உள்ளது. [3] ஜவஹர் கலா கேந்திரம் வாஸ்து வித்யா என்று அழைக்கப்படும் பண்டைய காலக் கட்டடக்கலைப் பாணியின் அடிப்படையில் அமைந்த கருத்துக்களைத் தழுவி அமைக்கப்பட்ட மையமாகும். [1] [4] இந்த மையத்தின் மூலமானது 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த மகாராஜாவால் உருவாக்கப்பட்டதாகும். இரண்டாவது ஜெய் சிங் என்று அழைக்கப்பட்ட அவர் ஒரு அறிஞர், கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். அவர் உருவாக்கிய இந்த நகரத் திட்டம், ஷிப்லா சாஸ்திரங்களை அடியொற்றி அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதில் வேத மதாலா எனப்படுகின்ற ஒன்பது சதுரங்கள் அல்லது வீடுகள் அமைந்திருக்கும். இந்த ஒன்பதும், ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஒன்பது கிரகங்களுள் இரண்டு கற்பனை கிரங்களான கேது மற்றும் ராகு ஆகியவையும் அடங்கும். இங்கே காணப்படுகின்ற சதுரங்களில் ஒரு சதுரத்தில் ஒரு மலை இருப்பதால் அது கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு, பின்னர் இரண்டு சதுரங்கள் அரண்மனையை அமைப்பதற்காக ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்டன. ஜெய்ப்பூர் என்ற பிங்க் நகரத்தை அமைத்த மகாராஜா ஜெய் சிங், முரண்பாடான இரண்டு கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஒரு புறம் புராணக் கருத்துக்களைக் கொண்ட பண்டைய நவக்கிரகங்கள் என்றழைக்கப்படுகின்ற ஒன்பது கிரகங்களின் மண்டலம் என்ற கருத்தும், மற்றொரு புறம் நவீன காலத்திய அறிவியல் மற்றும் முன்னேற்றம் தொடர்பான கருத்தும் ஆகும்.[5] கேந்திராவிற்கான கொரியாவின் திட்டம் நேரடியாக அசல் நவக்ரகம் அல்லது மண்டலாவின் ஒன்பது வீடுகளைக் குறிக்கிறது. சதுரங்களில் ஒன்று அசல் நகர திட்டத்தை நினைவுகூருவதற்கும் நுழைவாயிலை உருவாக்குவதற்கும் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஜெய்ப்பூர் நகரத்தின் திட்டம் ஒன்பது சதுர யந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். அதில் ஒரு சதுரம் இடம்பெயர்ந்து, தொடர்ந்து இரண்டு மத்திய சதுரங்கள் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. சதுரங்கள் 8 மீ உயர சுவரால் வரையறுக்கப்படுகின்றன, இது ஜெய்ப்பூர் பழைய நகரத்துடன் கூடிய கோட்டை சுவரை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. திரையரங்கம்ரங்கயன், மிஹிர், திறந்த வெளி அரங்கம் போன்ற அரங்கங்கள் ஜவஹர் கலா கேந்திராவில் காணப்படுகின்ற அரங்கங்களாகும். புகைப்படத்தொகுப்பு
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia