ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
பேரருட்திரு ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் (Right Reverend Justin Bernard Gnanapragasam, பிறப்பு: 13 மே 1948) இலங்கைத் தமிழ் கத்தோலிக்கக் குருக்களும், தற்போதைய உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கைஞானப்பிரகாசம் 1948 மே 13 இல் இலங்கையின் வடக்கே கரம்பொன் என்ற ஊரில் பிறந்தார்.[1][2] ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[3][4] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் கண்டி தேசிய குருமடத்திலும், பின்னர் புனேயில் உள்ள பாப்பிறைக் குருமடத்திலும் கற்று இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பணிஞானப்பிரகாசம் 1974 ஏப்ரலில் குருநிலைப்படுத்தப்பட்டார்.[1][2] கிளிநொச்சி, வலைப்பாடு (1974-75), உருத்திரபுரம் (1975-76), இளவாலை (1976-79) ஆகிய இடங்களில் துணைக்குருக்களாகப் பணியாற்றினார்.[1] 1979-80 காலப்பகுதியில் இங்கிலாந்து ஹல் பல்கலைக்கழகத்தில் படித்து பொதுப்படையான இறையியலில் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இலங்கை திரும்பி இளவாலை மாரீசன்கூடல் கோவிற்பற்று குருக்களாகவும், இளவாலை புனித என்றீசு கல்லூரியில் துணைத் தலைவராகவும் (vice-rector, 1980-85) பணியாற்றினார்.[1] 1982-1984 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில் கிறித்தவ நாகரிகத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5] 1986 இல் மீண்டும் இங்கிலாந்து சென்று சவுத்தாம்ப்டனில் கல்வியியல் அறிவியல் பயின்று 1989 இல் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியின் தலைவராகவும் (1990-94), இளவாலை Deanery இன் பீடாதிபதியாகவும் (1995-02), யாழ்ப்பாணக் குருமடத்தின் வருகைதரு பேராசிரியராகவும் (1992-06), யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியின் தலைவராகவும் (2002-07) பணியாற்றினார்.[1] 20007 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பொதுப் பதில்குருவாக நியமிக்கப்பட்டார்.[1] 1998 முதல் 2014 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை உறிப்பினராகவும் பணியாற்றினார்.[5] 2015 அக்டோபரில் 11-வது யாழ்ப்பாண ஆயராக திருத்தந்தை பிரான்சிசுவினால் நியமிக்கப்பட்டார்.[1][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia