ஜாக் கலிஸ்
ஜாக் ஹென்றி கலிஸ் (Jacques Henry Kallis, பிறப்பு: அக்டோபர் 16, 1975),தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஒட்டங்கள் மற்றும் 250 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் இவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] மேலும் ஒருநாள் போட்டிகளில் 131 கேட்சுகளைப் பிடித்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ள இவர் மொத்தம் 13,289 ஓட்டங்களையும் 290 இலக்குகளையும் எடுத்துள்ளார். மேலும் 200 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.[2][3] இவர் மொத்தம் 166 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 55 க்கும் அதிகமாக உள்ளது.[4][5] 2007 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான நான்கு போட்டிகளில் ஐந்து நூறு ஓட்டங்கள் எடுத்துள்ளார். சனவரி 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேருத் துடுப்பாட்டத்தின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இவரின் 40 ஆவது நூறு ஆகும். இதன்மூலம் அதிக நூறுகள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 51 நூறுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 2008 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. 2005 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட இவை விருதையும், 2007 ஆம் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட இவை விருதையும் பெற்றார்.[6] சோபர்ஸ், மற்றும் வால்ரர் ஹமொண்ட், ஜாக் கலிஸ் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலத் துறையர்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். இவர்களின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் அதிகமாகவும், ஒருநாள் போட்டிகளில் 20 க்கு அதிகமாகவும் உள்ளது.[7] சனவரி 2, 2013 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 13,000 ஓட்டங்கள் எடுத்தார்[8]. இதன்மூலம் இந்த இலக்கினை எடுத்த முதல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 292 இலக்குகளையும் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிகஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்களுக்கான தரவரிசையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.[9][10][11][12][13] 2013 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[14] டிசம்பர் 2013 இல் டர்பனில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்துடன் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[15][16][17] இவரின் இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார் இதன்மூலம் இறுதிப்போட்டியில் நூறு அடித்த சில துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.[18][19] சூலை 30,2014 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் இருந்து ஓய்வு பெற்றார்.[20] துடுப்பாட்ட வாழ்க்கைகாலிஸ் வின்பெர்க் பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியில் கலந்து கொண்டு துடுப்பாட்டம் விளையாடினார்.[21] ஒரு இளைஞனாக, கலிஸ் இங்கிலாந்தில் நெதர்ஃபீல்ட் சி.சி.யு அணிக்காக சில காலம் விளையாடினார். இவர் 14 போட்டிகளில் விளையாடி 98.87 எனும் சராசரியில் 791 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஜூலை 1993 இல், ஸ்காட்லாந்தின் யு -19 அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா யு -17 அணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1993/94 ஆம் அண்டுகளில் 18 வயதான போது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 1995 டிசம்பர் 14-18 அன்று இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டர்பனில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.ஆனால் துவக்க போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுக்கத் தவறினார். காலிஸ் 1996 இல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அங்கு தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.ஆனால் சிறந்து விளங்க அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.[22] 1997 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 61 ஓட்டங்களுடன், பின்னர் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு, மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[23] 1998-20021998 மற்றும் 2002 க்கு இடையில், ஐ.சி.சியின் துடுப்பாட்ட மதிப்பீடுகளின் படி காலிஸ் உலகின் முன்னணி பன்முக வீரர்களில் ஒருவராக இருந்தார்.[24] 1998 ஆம் ஆண்டில், நடைபெற்ற ஐ.சி.சி வாகையாளர் கோப்பைத் தொடரில் இரண்டு ஆட்ட நாயகன் விருதுகளும் தொடர் நாயகன் விருதினையும் பெற்றார். 1999 ஐ.சி.சி துடுப்பாட்ட உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதினையும் வென்றார். 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் பன்முக வீரர்களுக்காக ஐசிசி தர வரிசையில் முதலிடம் பெற்றார்.பின்னர் ஒருநாள் போட்டிகளில் 3 ஆவது வீரராகக் களம் இறங்கினார். 2013-2014தேர்வுத் துடுப்பாட்டப் வரலாற்றில் ( சர் டொனால்ட் பிராட்மேன் மற்றும் முகமது யூசுப் மற்றும் கவுதம் கம்பீருக்கு முன்) தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்த நான்கு வீரர்களில் ஒருவரான காலிஸ் 2003/04 பருவத்தில் சிறப்பாக விளையாடினார். 2004, 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இவர் சிறப்பாக விளையாடியதற்காக, உலக தேர்வுத் துடுப்பாட்டப் லெவன் அணியில் இடம் பெற்றார்.[25] ஐசிசி உலக ஒருநாள் லெவன் அணியில் 2004,[26] 2005 [26] மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் லெவன் அணியில் 12 ஆவது வீரராகப் பெயரிடப்பட்டார்.[27] 2007 ஆம் ஆண்டிலும் இவர் ஒருநாள் லெவன் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.[27] 2005 ஆம் ஆண்டில், தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிக விரைவாக அரைநூறுகள் எடுத்த சாதனையை படைத்தார், ஜிம்பாப்வேக்கு எதிராக 24 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.[28] 2007 ஆம் ஆண்டில், காலிஸ் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐந்து நூறுகளை அடித்தார், பிராட்மேன், கென் பாரிங்டன் மற்றும் மத்தேயு ஹேடன் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையினை இவர் படைத்தார். சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia