ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்
ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் (George Jacob Holyoake 13 ஏப்பிரல் 1817–22 சனவரி 1906) என்பவர் பிரிட்டானிய செக்குலரிசக் கொள்கையாளர், கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவித்தவர், மற்றும் இதழாசிரியர் ஆவார். அரசியல், சமூகத் தளங்களில் முனைப்பாகச் செயல்பட்டார். முதன் முதலாக செக்குலரிசம் என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தார். ஹோலியோக் வரையறுத்த செக்குலரிசம் என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடு ஆகும். அதன்படி அரசுக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது; கல்விக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது. இக்கருத்துகளை ஹோலியோக் வலியுறுத்தினார். 1846 முதல் 1861 வரை ரீசனர் என்னும் பெயரில் சமயத்தைப் புறக்கணிக்கும் செய்தித்தாள் ஒன்றை நடத்திவந்தார். தொழிலாளர்களுக்காகக் கூட்டுறவு இயக்கத்தை முன்னெடுத்தார். இதற்கான கூட்டுறவு இதழ் 'தி இங்கிலீஷ் லீடர்' நடத்தி வந்தார்.(1864-1867). சோசலிசவாதி ராபர்ட்டு ஓவன்சின் கொள்கைகளைப் படித்துப் பின்பற்றினார். பிரஞ்சு மெய்யியலாளர் ஆகத்து கோம்டின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் பற்றுக் கொண்டார். சார்லஸ் பிராட்லா, அன்னி பெசண்ட் அம்மையார் ஆகியோருடன் இணைந்து செயலாற்றினார். எழுதிய நூல்கள்
மேற்கோள்http://gerald-massey.org.uk/holyoake/ பரணிடப்பட்டது 2015-06-01 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia