ஜி. ஆர். எட்மண்டு
ஜி. ஆர். எட்மண்டு எனும் காசுபர் உரொசரி எட்மண்ட் (சனவரி 6, 1931– சூன் 2, 2013) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆறுமுகநேரி தொகுதியில் போட்டியிட்டு 1969 முதல் 1971 வரை தமிழ்நாடு சட்டசபையில் துணை சபாநாயகராகப் பணியாற்றினார்.[1][2][3] 1972ல் ம. கோ. இராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைத் தொடங்கியபோது, இவர் தானும் அக்கட்சியில் சேர்ந்து கொண்டார். ஜி. ஆர். எட்மண்டு 1977 முதல் 1980 வரை உணவுத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட ஆறு வெவ்வேறுதுறைகளில் மாநில மந்திரியாகப் பணிபுரிந்தார். புதுடில்லியில், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் காலத்திற்கு பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். 2013ம் ஆண்டு மதுரையில் காலமானார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia