ஜெசி மெக்கார்ட்னி (Jesse McCartney) (பிறப்பு ஏப்ரல் 9, 1987) ஓர் அமெரிக்க நடிகரும், பாடகரும் ஆவார். 1990களின் பிற்பகுதியில் ஒளிபரப்பப்பட்ட பகல்நேர நாடகமான ஆல் மை சில்ட்ரன் என்ற நிகழ்ச்சியில் ஜே. ஆர். சாண்ட்லராக நடித்து புகழ் பெற்றார். 2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பாய் பேண்ட் டிரீம் ஸ்ட்ரீட் இசைக்குழுவின் ஒரு அங்கமாக இருந்த இவர் தனியாக நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். தொலைக்காட்சித் தொடரான சம்மர்லேண்டு மற்றும் ஏபிசி குடும்பத் தொடரான கிரீக் நாடகத்திலும் நடித்தார். மெக்கார்ட்னி பின்னணி குரல் அளிப்பவராகவும் இருந்தார். ஆல்வின் அன்ட் சிப்மங்க்ஸ் திரைப்படத் தொடரில் தியோடர், ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ! நாடகத்தில் ஜோஜோ மெக்டாட், டிங்கர் பெல் தொடரில் டெரன்ஸ், யங் ஜஸ்டிஸ் தொடரில் டிக் கிரேசன் போன்ற கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தார். மேலும், கிங்டம் ஹார்ட்ஸ் என்ற வீடியோ கேம் தொடரில் ரோக்சாஸ் மற்றும் வென்டஸ் ஆகிய பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தார்.
மெக்கார்ட்னியின் இசை வாழ்க்கை 2004 ஆம் ஆண்டு பியூட்டிஃபுல் சோல் என்ற முதல் இசைத் தொகுப்புடன் தொடங்கியது. இவரது டிபார்ச்சர் என்ற மூன்றாவது இசைத் தொகுப்பில் இடம்பெற்ற லீவின் என்ற தனிப்பாடல், பில்போர்டு ஹாட் 100 இல் முதல் 10 இடங்களைப் பிடித்தது. மேலும் இது இவரது சிறந்த விற்பனையான பாடலாகும். இவரது நியூ ஸ்டேஜ் என்ற இசைத் தொகுப்பு 2021 இல் வெளியிடப்பட்டது. மெக்கார்ட்னி, பிளீடிங் லவ் என்ற பாடலை இணைந்து எழுதியதற்காகவும் அறியப்படுகிறார். இது 2007 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பாடகி லியோனா லூயிஸுக்கு உலகளாவிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இளமை வாழ்க்கை
மெக்கார்ட்னி நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டரில் உள்ள ஆர்ட்ஸ்லியில் ஜிஞ்சர் மற்றும் ஸ்காட் மெக்கார்ட்னியின் மகனாகப் பிறந்தார்.[2][3] தனது ஏழு வயதில் உள்ளூர் சமூக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அப்போது ஆலிவர்! என்ற இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தினார்.[4] 1998 ஆம் ஆண்டில், சுகர் பீட்ஸ் இசைக்குழுவுடன் சேர்ந்து பாடினார். பத்து வயதில் பில் ஆஃப் தி ஃபியூச்சர் தொடரின் ரிக்கி உல்மனுடன் சேர்ந்து தி கிங் அண்ட் ஐ என்ற இசை நாடகத்தை நடத்த தேசிய சுற்றுப்பயணம் செய்தார். சுகர் பீட்ஸ் இசைக்குழுவின் 1998, 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டு வெளியீடுகளில் இவரது பாடல்களைக் கேட்கலாம்.[5]
தொண்டுப் பணிகள்
2005 ஆம் ஆண்டில், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2005 கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “அனைவரும் ஒன்று கூடுவோம்” என்ற பெயரிலான அறக்கட்டளை வாயிலாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தப் பாடலை ஷரோன் ஸ்டோன், டாமன் ஷார்ப், மார்க் ஃபீஸ்ட் மற்றும் டெனிஸ் ரிச் ஆகியோர் எழுதி நவம்பர் 21, 2005 அன்று வெளியிடப்பட்டது.
2005ம் ஆண்டில், அமெரிக்கா முழுவதும் உள்ள பொதுப்பள்ளிகளில் பயிலும் வசதியற்ற மாணவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் லிட்டில் கிட்ஸ் ராக்[6] என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக ஒப்பந்தத்தில் மெக்கார்ட்னி கையெழுத்திட்டார். மேலும், அதன் கௌரவ இயக்குநர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
"போதை இல்லாத அமெரிக்காவின் குழந்தைகள்" என்ற பிரச்சாரத்துக்காக வானொலி நிகழ்ச்சிகள் வழங்கினார், புனித ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளராக உள்ளார், அத்துடன் தனது தாயாரின் தோழியால் துவக்கப்பட்ட ஸ்பேஸ் என்ற அறக்கட்டளையிலும் அங்கம் வகிக்கிறார். சிட்டி ஆஃப் ஹோப் புற்றுநோய் மையத்தின் நலனுக்காக, 2005ம் ஆண்டில் ஹோப் ராக்ஸ் இசை நிகழ்ச்சியை நடத்தினார். செயிண்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளராக உள்ளார். ஹோப் நகர புற்றுநோய் மையத்திற்கு பயனளிக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு ஹோப் ராக்ஸ் இசை நிகழ்ச்சியில் மெக்கார்ட்னி ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.[7] அக்டோபர் 25, 2009 அன்று நடந்த ஹோப் இசை நிகழ்ச்சியில் டிஸ்னி நட்சத்திரங்களான மைலே சைரஸ் மற்றும் டெமி லோவாடோ ஆகியோருடன் இணைந்து கான்செர்ட் ஃபார் ஹோப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.[8]
சொந்த வாழ்க்கை
செப்டம்பர் 2019 இல், மெக்கார்ட்னி தனது ஏழு வருட காதலி கேட்டி பீட்டர்சனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[9][10] இவர்கள் அக்டோபர் 23, 2021 அன்று திருமணம் செய்து கொண்டனர்.[11][12] பிப்ரவரி 14, 2025 அன்று, இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.[13][14]
2009: ஜெஸ்ஸி மெக்கார்ட்னி - ஹவுஸ் ஆஃப் புளூஸ், சன்செட் ஸ்ட்ரிப் பகுதியில் நேரடி நிகழ்ச்சி
மற்ற ஆல்பங்கள்
2003: ஜேமேக்
2005: ஆஃப் தி ரெக்கார்ட்
இசை நிகழ்ச்சிகளுக்கான சுற்றுப் பயணம்
2004/2005: பியூட்டிபுல் சோல் சுற்றுப் பயணம்
2006/2007: ரைட் வேர் யூ வான்ட் மீ சுற்றுப் பயணம்
2008: டிபார்ச்சர் மினி-சுற்றுப் பயணம்
2008: ஜெஸ்ஸி & ஜோர்டின் நேரடி சுற்றுப் பயணம்
2009: ஹெட்லைனிங் சுற்றுப் பயணம்
2009: New Kids on the Block: Live
திரைப்படங்கள்
2008.
2008.
திரைப்படம்
ஆண்டு
திரைப்படம்
கதாப்பாத்திரம்
குறிப்புகள்
2001
தி பைரேட்ஸ் ஆஃப் சென்ட்ரல் பார்க்
சைமன் பேஸ்கின்
2005
பீட்ஸா
ஜஸ்டின் பிரிட்ஜஸ்
2007
ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ்
தியோடர்
பின்னணி குரல் கதாபாத்திரம்
2008
ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ!
ஜோஜோ
பின்னணி குரல் கதாபாத்திரம்
அன்ஸ்டேபிள் ஃபேபிள்ஸ்: 3 பிக்ஸ் அண்டு ய பேபி
லக்கி
பின்னணி குரல் கதாபாத்திரம்
கீத்
கீத்
முக்கியக் கதாபாத்திரம்.
டிங்கர் பெல்
டெரென்ஸ்
பின்னணி குரல் கதாபாத்திரம்
2007
டிங்கர் பெல் அண்டு தி லாஸ்ட் ட்ரெஷர்
பின்னணி குரல் கதாபாத்திரம்
Alvin and the Chipmunks: The Squeakquel
தியோடர்
பின்னணி குரல் கதாபாத்திரம்
2010
பிவேர் தி கோஞ்சோ
ரிலோ
முக்கிய கதாபாத்திரம், போஸ்ட்-புரொடக்ஷன்
தொலைக்காட்சி
ஆண்டு
தலைப்பு
கதாபாத்திரம்
குறிப்புகள்
1998-2001
ஆல் மை சில்ரன்
ஜேஆர் கேண்ட்லர்
எட்டு அத்தியாயங்கள் இளைய நடிகராக பகல்பொழுது தொடரில் சிறப்பாக நடித்தமைக்காக, இளைய கலைஞருக்கான விருது இளைய துணை நடிகராக பகல்பொழுது தொடரில் சிறப்பாக நடித்தமைக்காக, இளைய கலைஞருக்கான விருது பரிந்துரை — சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான சோப் ஓபரா டைஜஸ்ட் விருது பரிந்துரை — இளைய நடிகராக தொடர் நாடகத்தில் நடித்தமைக்காக, இளைய கலைஞருக்கான எம்மி விருது (2001, 2002) பரிந்துரை — இளைய நடிகராக சோப் ஓபராவில் சிறப்பாக நடித்தமைக்காக இளைய கலைஞருக்கான விருது
2000
லா & ஆர்டர்
டேன்னி டிரிஸ்கால்
"தின் ஐஸ்"
2002
தி ஸ்ட்ரேஞ்ச் லெகசி ஆஃப் கேமரூன் க்ரூஸ்
கேமரூன் க்ருஸ்
2004
வாட் ஐ லைக் அபவுட் யூ
அவராகவே
"தி நாட் சோ சிம்பிள் லைஃப்"
2004-2005
சம்மர்லேண்ட்
பிராடின் வெஸ்டர்லி
இருபத்தி ஆறு அத்தியாயங்கள், முக்கிய கதாபாத்திரம் பரிந்துரை — விருப்பமான தொலைக்காட்சி நடிகருக்கான சாய்ஸ் டிவி விருது: நாடகம்
1998: பரிந்துரை : சிறந்த குழந்தைகள் ஆல்பத்துக்கான கிராம்மி விருது (சுகர் பீட்ஸின் ஒரு பகுதியாக ஹவ் ஸ்வீட் இட் இஸ் ஆல்பத்துக்காக)
2001: பரிந்துரை : சோப் ஓபரா டைஜஸ்ட் விருது - சிறந்த குழந்தை நட்சத்திரம்
2001: பரிந்துரை : பகல்பொழுது எம்மி - தொடர்நாடகத்தில் சிறந்த இளைய இயக்குநர்
2002: வெற்றி : இளைய கலைஞர் விருது - பகல்பொழுது தொலைக்காட்சி தொடரில் சிறந்த நடிப்பு - இளைய நடிகர்
2002: பரிந்துரை : Daytime Emmy - Outstanding Younger Actor in a Drama Series
2005: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் ஆண் நடிகர்[15]
005: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் பிரேக்-அவுட் நடிகர்-ஆண்[15]
2005: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் கிராஸோவர் கலைஞர்[15]
2005: பரிந்துரை : MTV வீடியோ மியூசிக் விருதுகள் - "பியூட்டிபுல் சோல்" ஆல்பத்துக்காக சிறந்த பாப் வீடியோ விருது
2005: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - தொடச்சியாக கேட்கத்தூண்டும் சிறந்த பாடல்
2005: பரிந்துரை : அமெரிக்க இசை விருதுகள் - சிறந்த புதுமுக கலைஞர்
2005: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - சிறந்த கரோகே பாடல்
2005: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - சிறந்த ஆண் பாடகர்
2006: வெற்றி : கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விருது - பிடித்த ஆண் பாடகர்[16]
2006: வெற்றி : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - சிறந்த "கண்ணீர்" விருது
2007: பரிந்துரை : கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விருது இத்தாலி - சிறந்த சர்வதேச கலைஞர்
2007: பரிந்துரை : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - சிறந்த ஆண் பாடகர்
2007: பரிந்துரை : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - "ஜஸ்ட் சோ யூ நோ" ஆல்பத்துக்காக சிறந்த வீடியோ விருது
2007: பரிந்துரை : கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விருது - பிடித்தமான ஆண் பாடகர்
2007: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - சிறந்த ஆண் பாடகர்
2008: பரிந்துரை : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - ஆண்டின் சிறந்த ஆண்
2008: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் ஆண் கலைஞர்
2008: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் அதிக ரசிகர்களைக் கொண்டவர்
2008: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் சம்மர் பாடல் (லீவிங்)
2009: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சிறந்த ஆண் பாடகர்
2009: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் காதல் பாடல் (ஹவ் டூ யூ ஸ்லீப்?)
மேற்கோள்கள்
↑Park, Michael (4 July 2008). "Jesse McCartney Is All Grown Up". people.com. People. Retrieved 10 August 2022. the Dream Street alum is diving headfirst into adulthood with a racy new R&B album and a collaboration with British pop star Leona Lewis.