ஜெண்டில்மேன் (2016 திரைப்படம்)
ஜெண்டில்மேன் (Gentleman) என்பது 2016 ஆண்டைய இந்திய தெலுங்கு காதல், மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தை இந்திரகண்டி மோகன கிருஷ்ணன் இயக்கியும், ஆர். டேவிட் நாதனுடன் இணைந்து எழுதியுள்ளார். படத்தை சிவலிங்க கிருஷ்ண பிரசாத்தின் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரசாத் திரைப்படத் தயாரிப்புக்கு மீண்டும் வந்துள்ளார். இப்படத்தில் நானி, சுரபி, நிவேதா தாமஸ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்; மேலும் ஸ்ரீனிவாச அவசரலா, ஸ்ரீமுகி, மற்றும் ரோகிணி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை பி. ஜி. விந்தா செய்துள்ளார். படத்திற்கான இசை மணிசர்மாவால் செய்யப்பட்டுள்ளது. படத்தொகுப்பை மார்தாண்ட் கே. வெங்கடேஷ் செய்துள்ளார். முதன்மை படப்பிடிப்பு 2015 நவம்பரில் தொடங்கி 2016 ஏப்ரல் வரை நீடித்தது. கொடைக்கானலில், நடத்தப்பட்டப் படப்பிடிப்பைத் தவிர பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டன. படத்தின் தயாரிப்புச் செலவு ₹150 மில்லியன், ஜெண்டில்மேன் 2016 சூன் 17 அன்று உலக அளவில் 700 திரையரங்குகளில் வெளியானது. இது அமெரிக்காவில் திரையரங்குகள் எண்ணிக்கை அடிப்படையில் வெளியிடப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய தென்னிந்திய திரைப்படம் ஆகும். படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இது வணிகரீதியாகவும் வெற்றியை ஈட்டியது, இது விநியோகஸ்தர்களின் பங்கான 177.2 மில்லியன் ரூபாயைச் சேர்த்து உலகளவில் மொத்தமாக 326 மில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டி மிகப்பெரிய வெற்றியடைந்தது. கதைஇந்தப் படம் ஐஸ்வர்யா மற்றும் கேதரின் என்னும் இரு பெண்களின் கதையாகும். ஐஸ்வர்யா மற்றும் கேதரின் என இரண்டு பெண்கள் ஒரு விமானப் பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் பேசி பழகி தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். பேச்சு அவர்களின் காதலன்களைப் பற்றி வருகிறது பேசி முடித்து இருவரும் பயணத்தின் முடிவில் பிரிகின்றனர். இவர்களின் காதலர்களான ஜெயராம் "ஜெய்" முல்லைப்புடி (நானி) மற்றும் கௌதம் ஆகிய இருவரும் ஒரே தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் மிகக் குழப்பத்துடன் வீடு திரும்பும் கேதரினுக்கு அவரின் காதலரான கௌதம் கொடூரமான விபத்தில் இறந்துவிடுவதாக தகவல் வருகிறது. இந்த விசயத்தில் ஜெய்யை கேதரின் சந்தேகிக்கித்து, பலரிடம் விசாரிக்கிறார், இதில் ஜெய் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றிய உண்மைகளும் அதனுடன் கௌதம் பற்றிய விசயங்களும் வெளிப்படுகின்றன. தயாரிப்புபண்டிபோட்டு (2015) வெளியான பிறகு, திரைப்பட இயக்குநர் இந்திரகண்டி மோகன கிருஷ்ணன் இரண்டு திரைக்கதைப் பணிகளில் ஈடுபட்டார்; இதில் ஒன்றை 2015 மார்ச்சில் முடித்தார். இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் அவர் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார், இது அவருக்கு முற்றிலும் புதிய வகையான படமாகும்.[4] சிவலிங்க கிருஷ்ண பிரசாத் இந்த திரைப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டு, எட்டு வருடங்கள் கழித்து இப்படத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பிற்கு மீண்டும் வந்தார்.[5] தமிழ் எழுத்தாளரான ஆர். டேவிட் நாதன் எழுதிய ஒரு திரைக்கதையை கேட்ட பிரசாத் அது பிடித்துபோக கதையை இந்திரகண்டியை கேட்கச் செய்துள்ளார். இக்கதையை இந்திரகண்டி நாதனுடன் சேர்ந்து தெலுங்கு பேசும் மக்களின், பிராந்திய உணர்வுகளுக்கு ஏற்ப அதை மாற்றினார்.[6] நாதன் எழுதிய கதையை அவருடன் இணைந்து, இந்திரகண்டி முழு வடிவம் தந்து உரையாடலை எழுதினார். படத்தின் ஒளிப்பதிவு பி. ஜி. விந்தாவால் செய்யப்பட்டது. மணிசர்மா படத்துக்கு பின்னணி இசையமைத்தார். மார்தாண்ட் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பைச் செய்தார்.[7] படத்தில் கதாநாயகனை வில்லனா என சந்தேகிக்கப்படும்விதத்தில் கதை வருகிறது, ஆனால் உண்மையில் அவர் ஒரு நனிநாகரீகனாக இருப்பதால், இந்திரகண்டி அந்தப் பெயருக்கு இணையான தெலுங்குப் பெயரைத் தேர்ந்தெடுத்து அதை படத்தின் பெயராக வைக்க விரும்பினார். உத்தமடு மற்றும் மஞ்சிவாடு போன்ற பெயர்களைப் பற்றி சிந்தித்த பிறகு, அவர் ஜெண்ட்டில்மேனைத் தேர்ந்தெடுத்தார், அதனுடன் "ஹீரோ? வில்லன்?" என்ற வாசங்களும் இடப்பட்டன. படத்தின் பெயர் 2016 ஏப்ரல் 15 அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது,[8] அன்று இராம நவமி நாள் ஆகும்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia