ஜெமினி திட்டம்

ஜெமினி திட்டம்
திட்ட மேலோட்டம்
நாடுஐக்கிய அமெரிக்கா
பொறுப்பான நிறுவனம்நாசா
தற்போதைய நிலைநிறைவுபெற்றது
திட்ட வரலாறு
திட்டக் காலம்1961–1966
முதல் பறப்புஏப்ரல் 8, 1964
பணிக்குழுவுடனான முதலாவது பறப்புமார்ச் 23, 1965
கடைசிப் பறப்புநவம்பர் 11–15, 1966
வெற்றிகள்12
தோல்விகள்0
பகுதியளவிலான தோல்விகள்2:
ஏவுதளம்(கள்)கென்னடி விண்வெளி மையம்
ஊர்தித் தகவல்கள்
ஊர்தி வகைவிண்கலம்
பணிக்குழுவுடனான ஊர்தி(கள்)ஜெமினி
பணிக்குழுக் கொள்ளளவு2
ஏவுகலம்(கள்)
  • Titan II GLV
  • Atlas-Agena for Agena Target Vehicle

ஜெமினி திட்டம் (Project Gemini) என்பது நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்புத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் திட்டமான இது, 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1966-ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது. மெர்க்குரித் திட்டம் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கு இடையே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. ஜெமினி விண்கலமானது இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1965-லிருந்து 1966-வரை பத்து பணிக்குழுக்கள் புவி தாழ்வட்டப்பாதையில் சென்று வந்தனர். சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போர் விண்வெளிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுத்தது.

அப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி இணைத்தல் தொழில்நுட்பத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி மேம்படுத்தினர். இவ்வாறு அடிப்படையான தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்திய பின்னர், அப்பல்லோ திட்டம் அதன் முக்கிய குறிக்கோளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya