ஜெமினி ஸ்டூடியோஸ்
ஜெமினி ஸ்டுடியோஸ் (Gemini Studios) எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் எஸ். எஸ். வாசனால் 1940-ல் தொடங்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கி வந்த 1940 இல் தீக்கிரையாகி ,ஏலத்திற்கு வந்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை எஸ். எஸ். வாசன் ஏலத்தில் வாங்கி மறுகட்டுமானம் செய்து ஜெமினி ஸ்டூடியோசை நிறுவினார்.[சான்று தேவை] இதன் நிறுவனர் வாசன் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிற்கும் சூட்டப்பட்டது.[1] சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எஸ். எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமணியமிடமிருந்து இதை வாங்கிப் பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்.[2] இவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 'த பார்க்' (The Park, Chennai) என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia