ஜெம்மா சான்
ஜெம்மா சான் (ஆங்கிலம்: Gemma Chan) (பிறப்பு: 29 நவம்பர் 1982)[1] என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஷாங்காய் (2010), ஜாக் ரியான் (2014), லண்டன் பீல்ட்ஸ் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பெட்லாம் (2011), குமான்ஸ் (2014-2018) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் மற்றும் எட்டெர்னல்சு (2021) போன்ற திரைப்படங்களில் கேப்டன் 'மின்-எர்வா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2] ஆரம்ப கால வாழ்க்கைஜெம்மா சான் 29 நவம்பர் 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கைஸ் மருத்துவமனையில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பொறியியலாளர், அவர் ஹாங்காங்கில் வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் ஸ்காட்லாந்தில் கிரீனோக்கில் வளர்ந்தார். இவர்களின் பெற்றோர் சீனாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள்.[3][4] சான் தன்னை ஒரு பிரித்தானிய ஆசியராக அடையாளம் காட்டிக்கொண்டார்.[5][6][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia