டாக்டர் சாகிர் உசேன் கல்லூரிசாகிர் உசேன் கல்லூரி சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் அமைந்துள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். தொடக்க வரலாறுஇளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வேண்டும் என்ற எண்ணத்தினால் ஊர் நல தொண்டர்கள், கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தனர். எனினும், இப்பணியை ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல் போயிற்று. பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் ஒருவரும் முன் வரவில்லை. விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலை உருவானது.
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia