டாக்டர் பாஸ்டஸ் (நாடகம்)![]() டாக்டர் பாசுடசு (Doctor Faustus) என்பது இங்கிலாந்து அரசி எலிசபெத் காலத்திய நாடக ஆசிரியரான கிறித்தோபர் மார்லொவ்வால் எழுதபட்ட ஒரு நாடகம் ஆகும். இது டாக்டர் பாசுடசு என்பவருடைய வாழ்க்கை மற்றும் துன்பமயமான மரணம் குறித்தது ஆகும். நாடகத்தின் முதன்மைப் பாத்திரமான பாசுட் என்ற பாத்திரத்திரமானது செருமன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு புனையபட்டது. இது 1589 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டு 1592 க்கும் 1593 இடையில் நிகழ்ந்த மார்லோவின் மரணத்திற்கும் இடையில் மேடை ஏற்றபட்டிருக்கலாம். நாடகத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு காலத்தில் வெளியிடப்பட்டன.[1] கதைடாக்டர் பாசுடசு என்பர் கடவுளைவிட அதிகமான சக்தியை பெற வேண்டுமென நினைத்தார். இதில் நரகத்தின் தலைவரான லுசிஃபர் மற்றும் அவருடைய சீடரான மெபிசுடொபிலிசு இருவரும் டாக்டர் பாசுடசு விரும்பும் அனைத்துச் செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். இதற்கு முன்பே 24 ஆண்டுகளுக்கு லூசிஃபரிடம் டாக்டர் பாசுடசு தனது இரத்தத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடவுள் இரண்டு தேவதைகளை அதாவது நற்தேவதை மற்றும் தீய தேவதை ஆகிய இருவரையும் டாக்டர் பாசுடசிடம் அனுப்புகிறார். நற்தேவதை 24 ஆண்டுகள் இந்த உலகத்தில் அனைத்து சந்தோசத்தையும் பெறக்கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதே என அறிவுறுத்துகிறது. ஆனால் தீய தேவதை அந்த ஒப்பந்தத்தில் நீ கையெழுத்திடு என தூண்டுகிறது. ஏனெனில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்த உலகத்தில் கடவுளைவிட அதிகமான சக்தியை பெறலாம் என பாசுடசிடம் கூறுகின்றது. இதனால் இவ்வுலகத்தில் 7 கடும் பாவங்களாக கருதக்கூடிய அனைத்தையும் டாக்டர் பாசுடசு 24 ஆண்டுகளில் செய்துவிடுகிறார். இறுதியில் அவருடைய ஆன்மா நகரகத்தின் தலைவரான லூசிஃபர் அனுப்பிய ஒரு குழுவால் இரவு 12 மணிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதிலிருந்து மார்லோ, மனிதனின் ஆசை, விருப்பங்கள், தேவைகள் அனைத்திற்கும் ஒரு எல்லை வேண்டும் எனக் கூறுகிறார். இல்லையெனில் மனிதனுடைய வாழ்க்கை பேரழிவில் முடியும் என அறிவுறுத்துகிறார். மேற்கோள்கள்
பார்வை நூல்டாக்டர் பாஸ்டஸ்., நூலாசிரியர் : டாக்டர் கே.பாலச்சந்திரன் |
Portal di Ensiklopedia Dunia