நான்காம் தாமஸ் குரூஸ் மபோதர் (Thomas Cruise Mapother IV பிறப்பு: சூலை 3,1962 ) அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரரும் ஆவார். ஹாலிவுட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், நான்கு அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகளைத் தவிர, கவுரவ பாம் டி 'ஓர் மற்றும் மூன்று கோல்டன் குளோப் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.[1][2][3] இவரது திரைப்படங்கள் வட அமெரிக்காவில் 5 பில்லியன் டாலருக்கு அதிகமாகவும், உலகளவில் 12 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளன. இதனால் இவர் அனைத்துக் காலத்திலும் அதிக வருமானம் ஈட்டிய நடிகர்களில் ஒருவராக உள்ளார்.[4][5] குரூஸ் தொடர்ச்சியாக $100 மில்லியன் வசூல் செய்த திரைப்படங்களுக்கான கின்னசின் உலக சாதனையைப் படைத்துள்ளார். இது 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் சாதிக்கப்பட்டது.[6] இவர், தொடர்ந்து உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.[7]
குரூஸ், டாப் கன் திரைப்படத்தினைத் தொடர்ந்து மார்ட்டின் இசுகோர்செசின்தி கலர் ஆஃப் மணி திரைப்படத்தில் நடித்தார். இது 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் பால் நியூமனுடன் இணை சேர்ந்து நடித்தார். இவரது நடிப்பிற்காகப் பாராட்டினைப் பெற்றார்.[8]
1988ஆம் ஆண்டில், க்ரூஸ் காக்டெய்ல் என்ற படத்தில் நடித்தார். இது வணிக ரீதியில் வெற்றி பெற்றது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவரது நடிப்பு மோசமான நடிகருக்கான ராஸ்ஸி விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இவர் டஸ்டின் ஹாஃப்மேனுடன் பாரி லெவின்சனின் ரெய்ன் மேன் படத்தில் நடித்தார். இது சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.[9]
இளமையும கல்வியும்
குரூஸ் சூலை 3,1962இல் நியூயார்க்கின் சிராகூசில்[10] மின் பொறியாளர் தாமசு குரூசுமபோதர் III (1934-1984) சிறப்புக் கல்வி ஆசிரியர் மேரி லீ (née Pfiffer′ 1936-2017) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[11] இவரது பெற்றோர் இருவரும் கென்டக்கியின் லூயிஸ்வில்லியைச் சேர்ந்தவர்கள். மேலும் இங்கிலாந்து, செருர்மன், ஐரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.[12][13][14] குரூஸுக்கு லீ ஆன், மரியன், காசு என மூன்று சகோதரிகள் உள்ளனர். இவரது உறவினர்களில் ஒருவரான வில்லியம் மபோதரும் ஒரு நடிகரவார். இவர் குரூசுடன் ஐந்து படங்களில் தோன்றியுள்ளார்.[15] கத்தோலிக்கப் பின்னணியில் வறுமையில் வாழ்ந்தார். இவர் தனது தந்தையை "குழப்பமான வணிகர்" என்றும் தனது குழந்தைகளை அடிக்கும் "கொடுமைக்காரன்", "கோழை" என்று விவரித்தார்.[16] குரூசின் தந்தை 1984இல் புற்றுநோயால் இறந்தார்.[16][17]
தனது 18ஆம் வயதில், தனது தாய், மாற்றாந்தாய் தந்தையின் ஒப்புதலோடு நடிப்புத் தொழிலைத் தொடர குரூஸ் நியூயார்க் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார்.[18][19] நியூயார்க்கில் பணியாளாகப் பணியாற்றிய பிறகு, தொலைக்காட்சியில் நடிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். இவர் சி. ஏ. ஏ உடன் கையெழுத்திட்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[18] 1981ஆம் ஆண்டு வெளியான எண்ட்லெசு லவ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் டேப்ஸ் என்ற திரைப்படத்தில் இராணுவ அகாதமி மாணவராக முக்கியமான துணை வேடத்தில் நடித்தார். குரூஸ் முதலில் ஒரு பின்னணி நடிகராக தோன்றவிருந்தார். ஆனால் இயக்குநர் ஹரோல்ட் பெக்கருக்கு இவரது நடிப்புத் திறன் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இவரது கதாப்பாத்திரத்தினை விரிவுபடுத்தினார்.[20] 1983ஆம் ஆண்டில், பிரான்சிஸ் போர்டு கபேல குரூயிசு தி அவுட்சைடர்சு திரைப்படத்தின் குழும நடிகர்களில் குரூஸ் ஒரு பகுதியாக இருந்தார். இதே ஆண்டு இவர் ஆல் தி ரைட் மூவ்சு மற்றும் ரிசுக்கி பிசினசு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1985இல் வெளியான ரிட்லி சுகாட் திரைப்படமான லெஜெண்டிலும் கதாநாயகனாக நடித்தார்.[21] 1986ஆம் ஆண்டின் டாப் கன் மூலம், சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார்.[22]
சொந்த வாழ்க்கை
குரூஸ் தனது பெரும்பாலான நேரத்தை கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ், புளோரிடாவின் கிளியர்வாட்டர், இங்கிலாந்தின் தெற்கில் கழித்தார். இங்கு குரூஸ் மத்திய லண்டன், டுல்விச், கிழக்கு கிரின்ஸ்டெட், பிக்ஜின் ஹில் போன்ற பல்வேறு இடங்களில் வசித்தார்.[23][24][25][26][27] 1980களில், லிசா கில்பர்ட், ரெபேக்கா டி மோர்னே, பட்டி சியால்பா, செர் ஆகியோருடன் குரூஸ் உறவு நிலையில் இருந்தார்.[28][29][30][31]