டார்ட்மத் கல்லூரி
டார்ட்மத் கல்லூரி (Dartmouth College ஒலிப்பு: /ˈdɑrtməθ/) நியூ ஹாம்சயர் மாநிலத்தில் அனோவர் நகரில் அமைந்துள்ள ஓர் தனியார், இருபாலர் இணைக்கல்வி பல்கலைக்கழகம்[7] "டார்ட்மத் கல்லூரியின் பொறுப்பாட்சியர்கள்" என நிறுவப்பட்ட [8][9] இந்நிறுவனம் ஐவி லீக் உறுப்பினராகும். தவிரவும் அமெரிக்கப் புரட்சிக்கு முன்னர் நிறுவப்பட்ட ஒன்பது கல்லூரிகளில் இதுவும் ஒன்று.[10] இளங்கலை நுண்கலைப் பாடத் திட்டத்துடன் இங்கு மருத்துவம், பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை பாடத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. நுண்கலை மற்றும் அறிவியல் துறைகளில் 19 முதுகலை பாடதிட்டங்கள் வழங்கப்படுகின்றன. rollment of 5,848 பேர் படிக்கும் டார்ட்மத் கல்லூரி ஐவி லீக் கல்லூரிகளிலேயே மிகச் சிறியதாகும்.[3] ![]() இக்கல்லூரி உள்ளக அமெரிக்கர்களை கிறித்தவர்களாக மாற்றிட மறைபரப்புனர் எலீசர் வீலாக்கால் 1769இல் நிறுவப்பட்டது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் பல டார்ட்மத் முன்னாள் மாணவர்கள் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.[11] டார்ட்மத் கல்லூரியின் வளாகம் நியூ ஆம்சையரின் கனெக்டிக்கட் ஆற்று மேல் பள்ளத்தாக்கில் 269-ஏக்கர் (1.1 km²) ஊரகப் பரப்பில் அமைந்துள்ளது. தனிமையான சூழல் நிலவுவதால் தடகளப் பயிற்சிகளிலும் கிரேக்க அமைப்புகளிலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர்.[12] டார்ட்மத்தின் 34 பல்கலை விளையாட்டு அணிகளும் ஐவி லீக்கின் NCAA முதல் கோட்டம் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இட்யூபிஞ்சென் பல்கலைக்கழகம் (செர்மனி), துர்கம் பல்கலைக்கழகம் (UK), அரசியார் பல்கலைக்கழகம் (கனடா), ஒடாகோ பல்கலைக்கழகம் (நியூசிலாந்து), மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் (ஆத்திரேலியா) மற்றும் உப்சாலா பல்கலைக்கழகம் (சுவீடன்) இணைந்த பல்கலைக்கழகங்களின் மாதரிகி பிணையத்தில் (MNU) இக்கல்லூரி 2010இல் இணைந்தது.[13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia