டிசி காமிக்ஸ்
நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்ஸ்[1] என்ற பெயரில் 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டிசி காமிக்ஸ், அமெரிக்க வரைகதை புத்தகச் சந்தையில் செயல்படும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இது டைம் வார்னெர் நிறுவனத்துக்குச் சொந்தமான வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டீசீ எண்டர்டயின்மென்ட் இன்க்.,[2] நிறுவனத்தின் பதிப்பகப் பிரிவு ஆகும். சூப்பர்மேன், பேட்மேன், வொண்டெர் வுமன், பிளாஷ், கிரீன் லாண்டர்ன், கேப்டன் மார்வெல், கிரீன் யாரோவ், ஜஸ்டிஸ் லீக் மற்றும் டீசீ அண்டத்தின் மற்றவைகளை உள்ளிட்ட நன்கு-அறிந்த கதாப்பாத்திரங்களை கொண்ட புத்தகங்களை டீசீ காமிக்ஸ் தயாரித்து உள்ளது[3]. இந்நிறுவனத்தின் பிரபல வரைகதை தொடரான 'டிடக்டிவ் காமிக்சிலிருந்த' தலைப்பெழுத்துக்கள் தான் இந்நிறுவனத்தின் அலுவல் பெயரான 'டிசி' என்றாகியது[4].நியூ யார்க் நகரத்தில் பிராட்வேயில் எண் 1700-இல் டீசீ காமிக்ஸ் தலைமையகம் உள்ளது[5]. ராண்டம் ஹவுஸ் புத்தகக்கடை சந்தைக்கு டிசிகாமிக்ஸ் புத்தகங்களை விநியோகிக்கிறது, வரிக்கதை புத்தக கடைகளுக்கு விநியோகிக்கிறது[5].மார்வெல் காமிக்சுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டிசி காமிக்ஸ். மேலும்,அமெரிக்க வரிக்கதை புத்தகச் சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் எண்பது விழுக்காட்டைக் கைப்பற்றி உள்ளனர். திரைப்படங்கள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia