டிராக் பதக்கம்20 ஆம் நூற்றாண்டின் சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் பால் டிராக்கின் நினைவாக பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்ட கோட்பாட்டு வேதியியல், கணிதவியல் துறையில் நான்கு விருதுகளின் பெயர் டிராக் பதக்கம் ஆகும். டிராக் பதக்கம் மற்றும் சொற்பொழிவு (நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகம்)முதல் நிறுவப்பட்ட பரிசு, கோட்பாட்டு இயற்பியலின் முன்னேற்றத்திற்கான டிராக் பதக்கம் ஆகும் , இது நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகம் சிட்னி ஆத்திரேலியாவுடன் இணைந்து பொது டிராக் சொற்பொழிவில் வழங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பேராசிரியர் டிராக் அங்கு ஐந்து சொற்பொழிவுகளை வழங்கியதை நினைவுகூரும் வகையில் இந்த சொற்பொழிவும் பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்த விரிவுரைகள் பின்னர் ஒரு புத்தகமாகஇயற்பியலின் திசைகள் (1978 - எச். ஓரா மற்றும் ஜே. செபன்சுகி பதிப்புகள்) எனும் பெயரில் வெளியிடப்பட்டன. . பேராசிரியர் டிராக் இந்த புத்தகத்திலிருந்து பெறப்பட்ட நிதியை டிராக் சொற்பொழிவு தொடரை நிறுவுவதற்காக பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1979 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்ட பரிசிலில் ஒரு வெள்ளிப் பதக்கமும் தகைமை ஊதியமும் அடங்கும். பெறுவோர்
ஐ. சி. டி. பி. டிராக் பதக்கம்ஐ. சி. டி. பி. டிராக் பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் கோட்பாட்டு இயற்பியலுக்கான அப்துசு சலாம் பன்னாட்டு மையத்தால் (ஐ. சி இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் (டிராக்கின் பிறந்த நாளான ஆகத்து 8 அன்று அறிவிக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1985 இல் வழங்கப்பட்டது.[1] புகழ்பெற்ற அறிவியலாளர்களின் பன்னாட்டுக் குழு பரிந்துரைக்கும் வேட்பாளர்களின் பட்டியலிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தக் குழு கோட்பாட்டு இயற்பியல் அல்லது கணிதத் துறைகளில் பணிபுரியும் றிவியல் அறிஞர்களிடமிருந்து பரிந்துரைகளை வரவேற்கிறது. ஐ. சி. டி. பி. யின் டிராக் பதக்கம் நோபல் பரிசு பெற்றவர்கள், ஃபீல்ட்சு பதக்கம் வென்றவர்கள் அல்லது வுல்ஃப் பரிசு வென்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.[1] இருப்பினும் பல டிராக் பதக்கம் வென்றவர்கள் பின்னர் மேலே சொன்ன விருதுகளில் ஒன்றை வென்றுள்ளனர்.[2][3][4][5] பதக்கம் வென்றவர்களுக்கு 5,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுகிறது. பெறுவோர்
ஐஓபி டிராக் பதக்கம்டிராக் பதக்கம் என்பது இயற்பியல் நிறுவனத்தால் (பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் இயற்பியலாளர்களுக்கான முக்கிய தொழில்முறை அமைப்பு) ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப் பதக்கமாகும்.[6] 1000 பவுண்டுகள் பரிசை உள்ளடக்கிய இந்த விருது 1985 ஆம் ஆண்டில் இயற்பியல் நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டு 1987 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்டது. பெறுவோர்
WATOC டிராக் பதக்கம்40 வயதிற்குட்பட்ட உலகின் சிறந்த கணக்கீட்டு வேதியியலாளருக்காக உலகக் கோட்பாட்டு, கணிப்பு வேதியிய்லாளர் கழகம் ஆண்டுதோறும் டிராக் பதக்கம் வழங்குகிறது. இந்த விருது முதன்முதலில் 1998 இல் வழங்கப்பட்டது. பெறுவோர்ஆதாரம்ஃ வாட்ஓசி மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia