டிரைகார்பன் மோனாக்சைடு
டிரைகார்பன் மோனாக்சைடு (Tricarbon monoxide) என்பது C3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். விண்வெளியில் வினைத்திறனுள்ள இயங்குறுப்பு ஆக்சோகார்பனாக இது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் தோன்றியவுடன் மறைகின்ற ஒரு சேர்மமாக இதை தயாரிக்க முடியும். அணி தனியாக்கல் நுட்பத்தில் இதனை தனித்துப் பிரிக்கலாம் அல்லது குறுகிய ஆயுள் வாயுவாக இதை தயாரிக்கலாம். டிரைகார்பன் மோனாக்சைடை ஒரு கீட்டோன் என்று அல்லது பல்லினகுமுலீன் வகையான ஆக்சோகுமுலீன் என்று வகைப்படுத்தலாம் [2]. இயற்கை தோற்றம்நுண்ணலை நிறமாலையில் அடர் இருட்டில் டாரசு மூலக்கூற்று மேகத்தில் ஒரு பகுதிக்கூறாகவும் [3] எலியாசு 18 என்ற முகிழ் மீனிலும் டிரைகார்பன் மோனாக்சைடு கண்டறியப்பட்டுள்ளது .[4]. இதை உருவாக்குவதற்கான பாதை பின்வருமாறு ஊகிக்கப்படுகிறது :[5]
கந்தகத்தை விட ஆக்சிஜன் 20 மடங்கு அதிகமாக இருந்தாலும், தொடர்புடைய C3S இருண்ட மூலக்கூற்று மேகங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அதிக உருவாக்க வீதமும் C3S இன் குறைவான முனைப்புத்தன்மையும் மட்டுமே வேறுபாடுகளாகும்[4] தயாரிப்புமெல்திரம் அமிலம் எனறு அழைக்கப்படும் 2,2-டைமெத்தில்-1,3-டையாக்சேன்-4,6-டையோனை சூடுபடுத்தினால் டிரைகார்பன் மோனாக்சைடு உருவாகிறது. இதனுடன் மேலும் அசிட்டோன், கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு போன்ரவையும் உருவாகின்றன [6]. அணுநிலை கார்பனை கார்பன் மோனாக்சைடுடன் ஆர்கான் முன்னிலையில் வினைபுரியச் செய்து ஆர்.எல்.தெகாக் மற்றும் டபிள்யூ.வால்டெனர் இருவரும் முதன்முதலில் டிரைகார்பன் மோனாக்சைடை அடையாளம் கண்டனர். அகச்சிவப்புக் கதிரின் ஈர்ப்பை 2241 செ.மீ−1 அலைவரிசையில் அவர்கள் கவனித்தனர்[6]. மெல்லிய டாண்ட்டலம் குழாயில் உள்ள கிராபைட்டை சூடுபடுத்தி அவர்கள் கார்பன் அணுக்களை பெற்றனர் [7]. எம்.இ. யாகாக்சு ஆர்கான் முன்னிலையில் டிரைகார்பன் டையாக்சைடை ஒளிப்பகுப்பு செய்து டிரைகார்பன் மோனாக்சைடை 2241 செ.மீ−1 அகச்சிவப்பு ஈர்ப்பு அலைவரிசையில் கண்டறிந்தார். இருப்பினும் என்ன சேர்மம் உருவானது என்பதை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை[7]. டையசோவளையபெண்டேன் டிரையோனை சூடுபடுத்தினாலும், அல்லது இதைப் போன்ற அமில நிரிலிகளை 2,4-அசோ-3—ஆக்சோ-டைபெண்டனாயிக் நிரிலியை சூடுபடுத்தினாலும் டிரைகார்பன் மோனாக்சைடு உருவாகிறது. டெட்ராகார்பன் டையாக்சைடு மீது ஒளியின் செயல்பாடும் டிரைகார்பன் மோனாக்சைடையும் கார்பன் மோனாக்சைடையும் தருகிறது[8]. பியூமரைல் குளோரைடை சூடுபடுத்துவதாலும் டிரைகார்பன் மோனாக்சைடு உருவாகிறது [2]. ஈயம் 2,4-டைநைட்ரோரிசோர்சினேட்டை சூடுபடுத்தியும் இதை தயாரிக்கலாம். விளைபொருளுடன் C2O, CO மற்றும் டிரைகார்பன் டையாக்சைடு போன்றவையும் உருவாகின்றன [9]. டிரைகார்பன் டையாக்சைடில் மின்சுமை இறக்கமும் மில்லியனுக்கு 11 பகுதிகள் டிரைகார்பன் மோனாக்சைடைக் கொடுகிறது[10] 3,5-டைமெத்தில்-1-புரோப்பைனால்பிரசோலை 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி ரொகெர் பிரவுன் இதை தயாரித்தார்[11]. 5,5’-பிசு(2,2-டைமெத்தில்-4,6-டையாக்சோ-1,3-டையாக்சேனியிலிடீன் அல்லது டை-ஐசோபுரோப்பைலிடீன் எத்திலீன்டெட்ராகார்பாக்சிலேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினாலும் டிரைகார்பன் மோனாக்சைடை தயாரிக்க முடியும்[11]. கார்பன் மோனாக்சைடு பனிக்கட்டியை எலக்ட்ரான் கதிர்வீச்சுக்கு உட்படுத்தினால் டிரைகார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட கார்பன் ஆக்சைடுகள் உருவாகின்றன. இச்செயல்முறை விண்வெளியிலுள்ள பனிக்கட்டிநிலை விண்பொருட்களில் நிகழ்கிறது[12]. வினைகள்குரோமியத்தின் ஈந்தணைவி Cr(CO)5CCCO போல டிரைகார்பன் மோனாக்சைடும் ஆறாவது குழுவைச் சேர்ந்த தனிமங்களுடன் ஈந்தணைவியாக உருவாகிறது. [n-Bu4N][CrI(CO)5] என்ற அணைவுச் சேர்மத்திலிருந்து இது உருவாகிறது. சோடியம் புரோப்பியோலேட்டின் வெள்ளி அசிட்டைலைடு (AgC≡CCOONa) வழிப்பெறுதி மற்றும் தயோபாசுகீன் போன்ற அணைவுச் சேர்மங்களிலிருந்தும் டிரைகார்பன் மோனாக்சைடு ஈந்தணைவியாக உருவாகிறது. வெள்ளி அயனிகளும் சோடியம் புரோப்பியோலேட்டும் சேர்ந்து வெள்ளி அசிட்டைலைடை கொடுக்கின்றன [13]. கருநீல நிற தீண்ம அணைவுச் சேர்மமான இதை பெண்டாகார்பனைல்(3-ஆக்சோபுரோப்பாடையீனைலிடீன்)குரோமியம்(0) என்கின்றனர். இது எளிதில் ஆவியாகும். 32 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும். டிரைகார்பன் மோனாக்சைடின் இருப்பு காரணமாக அகச்சிவப்பு நிறமாலையில் 2028 செ.மீ−1 அலைக்கற்றையில் இது வெளிப்படுகிறது. எக்சேனில் கரைக்க முடியுமென்றாலும் மெதுவாக இது சிதைவடைகிறது. டைகார்பன் இழக்கப்பட்டு கரைப்பானில் அசிட்டைலீனும் குமுலீனும் உருவாகின்றன. டைமெத்தில் சல்பாக்சைடு ஆக்சிசனேற்றமடைந்து டிரைகார்பன் மோனாக்சைடு ஈந்தணைவியாக டிரைகார்பன் டையாக்சைடுடன் இணைகிறது [14]. கண்ணாடியின் மீது டிரைகார்பன் மோனாக்சைடு ஒரு மெல்லிய படலமாகப் படிகிறது [11]. டிரைகார்பன் மோனாக்சைடும் யூரியாவும் வினைபுரிந்தால் யுராசில் உருவாகும். முதலில் இரண்டு மூலக்கூறுகளும் வினைபுரிந்து ஐசோசயனூரிக் அமிலத்தையும் புரோபியோலமைடையும் கொடுக்கின்றன. பின்னர் NH2 குழுவுடன் முப்பிணைப்பால் NH பிணைக்கப்படுகிறது. இறுதியாக வளையமாதல் நிகழ்ந்து யுராசில் தோன்றுகிறது [15]. பண்புகள்டிரைகார்பன் மோனாக்சைடு மூலக்கூறு நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்காது. 1 பாசுக்கல் என்ற குறைவான அழுத்தத்தில் இது 1 வினாடி மட்டுமே நிலைத்திருக்கும்[16]. C-O 1.149, C1-C2 1.300, C2-C3 1.273 என்ற பிணைப்பு நீளங்களும் பிணைப்புகளுக்கான விசை மாறிலி மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதுவொரு நேரியல் மூலக்கூறு ஆகும்.
டிரைகார்பன் மோனாக்சைடின் புரோட்டான் நாட்ட மதிப்பு 885 கிலோயூல் மோல்−1. ஆகும்[5]. இதேபோல 2.391 டி என்ற இருமுனைத் திருப்புத்திறன் மதிப்பையும் இச்சேர்மம் பெற்றுள்ளது[13]. ஆக்சிசன் விளிம்பு நேர்மின் சுமையையும் கார்பன் விளிம்பு எதிர்மின் சுமையையும் கொண்டிருக்கின்றன[5]. ஒவ்வொரு முனையிலும் முப்பிணைப்பும் நடுவில் ஒற்றைப்பிணைப்பும் உள்ள மூலக்கூறைப் போல டிரைகார்பன் மோனாக்சைடு செயல்படுகிறது. சயனோகென்னுடன் ஒத்த எலக்ட்ரான் அமைப்பையும் இது பெற்றுள்ளது[17] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia