டிவிஎஸ் குழுமம்

டிவிஎஸ் (TVS) தனது முதன்மை தொழிலகங்களை மதுரை மற்றும் சென்னையில் கொண்டுள்ள ஓர் தென்னிந்திய பல்துறை தொழில் நிறுவனமாகும். குழுமத்திலுள்ள ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களுமே தனிப்பட்ட முறையில் நிறுவனர் குடும்பத்திற்கு உரிமையானவை. மிகப்பெரிய நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் மூன்று இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இதன் நிறுவனர் தி. வே. சுந்தரம் அவர்களால் மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரும் தானுந்தி உறுப்புகளைத் தயாரிக்கும், வினியோகிக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்தக் குழுமத்தின் சார்வைப்பு நிறுவனமாக தி.வே.சுந்தரம் அய்யங்கார் & சன்ஸ் உள்ளது.

குழுமத்தின் முதன்மை நிறுவனங்கள்

  1. டிவிஎஸ் மோட்டார்ஸ்
  2. சுந்தரம் பாஸ்ட்னர்சு
  3. டிவிஎஸ் எலெக்ட்ரானிக்சு
  4. சுந்தரம் பைனான்சு
  5. வீல்சு இந்தியா
  6. அக்சில்சு இந்தியா
  7. பிரேக்சு இந்தியா
  8. சுந்தரம் கிளேட்டன் லிமிடெட்
  9. லூகாசு டிவிஎசு லிமிடெட்
  10. சதர்ன் ரோட்வேசு, மதுரை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya