டிஸ்கவரி தொலைக்காட்சி
(Discovery Channel) டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ஆகஸ்ட் 2013 நிலவரப்படி அமெரிக்காவில் 98,891,000 வீடுகளில் இத்தொலைக்காட்சி சேவை வழங்குகிறது.[2] வரலாறு'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்.[3].ஜூன் 17, 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர். வழங்கப்படும் மொழிகள்இத் தொலைக்காட்சி சர்வதேச அளவில் 170 நாடுகளில் 431 மில்லியன் வீடுகளுக்குச் சேவை வழங்குகிறது. ஸ்பானிஷ் , ஜெர்மன் , உருசிய மொழி , செக் , தமிழ் , ஹிந்தி , டச்சு , போர்த்துக்கீச மொழி , இத்தாலிய மொழி , நார்வே மொழி , சுவீடிய மொழி , டேனிய மொழி , பின்னிய மொழி , துருக்கிய மொழி , போலிய மொழி , அங்கேரிய மொழி , ருமேனிய மொழி , அராபிய மொழி , ஸ்லோவினியம் , ஜப்பானிய மொழி , கொரிய மொழி , மற்றும் செர்பிய மொழி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. தமிழ் ஒளிபரப்பு2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கிவருகிறது.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia