டி. இந்துமதிஇந்துமதி டி (Indumathi D) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துகள் இயற்பியலாளராவார். இவர் சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியராக உள்ளார்.[1] [2] தொடக்கம் முதலே இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தின் தீவிர செயல் உறுப்பினராக இருந்தார். [3][4] வாழ்க்கைக் குறிப்புஇந்துமதி சென்னையில் வளர்ந்தார்.[3] தந்தை ஒரு இயந்திர பொறியியலாளர் என்பதால் அவரது பணி இளம் வயதிலேயே இந்துமதிக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியது.[3] சென்னை கிறித்துவக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[5] துடுப்பாட்டம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட காயம் இந்துமதியை இயற்பியல் துறைக்குள் நுழைய காரணமாக இருந்தது.[3][4] கணித அறிவியல் நிறுவனத்தில் துகள் இயற்பியல் துறையில் இந்துமதி முனைவர் பட்டம் பெற்றார்.[5] ஒளியன்களின் சுழல் கட்டமைப்பு குறித்த ஆய்வை இவர் மேற்கொண்டார்.[5] ஆலோசகர் எம்.வி.என். மூர்த்தியிடம் முனைவர் ஆராய்ச்சிக்கான வழிகாட்டுதல் இந்துமதிக்குக் கிடைத்தது. ஒரு மாணவியாக இந்துமதி எசுஎன்1987ஏ என்ற மீவிண்மீன் வெடிப்புச் சிதறல் நிகழ்வைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினார்.[5][6] அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், செருமனியின் தார்ட்மண்ட் பல்கலைக்கழகம் பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் போன்ற நிறுவனங்களில் பனிபுரிந்த இந்துமதி இறுதியாக அலகாபாத்தின் அரீசு சந்திர ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு மீண்டும் கணித அறிவியல் நிருவனத்திற்குத் திரும்பினார்.[5] She returned to IMSc in 1998.[5] ஆய்வுகள்இந்துமதியின் முதன்மை ஆராய்ச்சிப் பகுதி உயர் ஆற்றல் இயற்பியல் தோற்ற நிகழ்வுக் கொள்கையாகும். வளிமண்டல மற்றும் சூரிய நியூட்ரினோக்கள், நியூக்ளியான் மற்றும் அணுக்கரு கட்டமைப்பு செயல்பாடுகள் போன்றவற்றிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது. இந்த தலைப்புகளில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் இந்துமதி எழுதியுள்ளார்.[2][5][7][8] மற்ற இந்திய விஞ்ஞானிகளுடன், சேர்ந்து இந்துமதி இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார். நியூட்ரினோ ஆய்வகம் என்பது இந்தியாவில் வளிமண்டல நியூட்ரினோக்களைப் படிப்பதற்கான முதல் நிலத்தடி ஆய்வகத்தை உருவாக்கும் திட்டமாகும்.[3][4][9] இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தின் கூட்டு முயற்சிக்கு இந்துமதி சிறந்த பரப்புரையாளராகவும்[10][11] பிரதிநிதியாகவும்[12][13] செயல்பட்டு வருகிறார். ஆய்வகம் முன்மொழிந்த பிரதான கண்டுபிடிப்புகளை வடிவமைப்பதில் பணிபுரியும் துணைக்குழுவையும் இவர் ஒருங்கிணைத்தார்.[14] கண்டுபிடிப்புகளின் சாத்தியக்கூறு, நிலை மற்றும் உடல் சாத்தியங்கள் குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[15][16] தனிப்பட்ட வாழ்க்கைஇந்துமதி ஒரு கணினி விஞ்ஞானியை மணந்தார், அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia