டி. எம். ஜெயமுருகன்
டி.எம். ஜெயமுருகன் (T. M. Jayamurugan, இறப்பு: 18 சனவரி 2025) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமாவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரோஜா மலரே (1997) என்ற திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். மேலும் அடடா என்ன அழகு (2009), தீ இவன் (2023) ஆகிய நாடகங்கள் உட்பட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தொழில்ஜெயமுருகன் தனது தயாரிப்பு நிறுவனமான மனிதன் சினி ஆர்ட்சு நிறுவனம் சார்பாக சிந்து பாத் (1995) படத்தை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் முதலில் நுழைந்தார்.[1] முரளி, அருண் பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ரோஜா மலரே (1997) என்ற காதல் நாடகத் திரைப்படத்தில் ஜெயமுருகன் இயக்குநராக அறிமுகமானார். படம் வெளியாவதற்கு முன்பே, செயின்ட் மேரிசு தீவுகளில் படப்பிடிப்பிற்காக படம் கவனத்தை ஈர்த்தது.[2] திரைப்படம் வெளியானதும், திரைப்பட விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3] 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இவர் லிவிங்சுடன், உதயா, விந்தியா ஆகியோருடன் பூங்குயிலே என்ற படத்தைத் தயாரித்தார். அது பல அட்டவணைகளுக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டது.[4][5] திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia