டி. கே. எஸ். இளங்கோவன்
தி. கோ. சீ. இளங்கோவன், T. K. S. Elangovan, பிறப்பு 30 ஆகஸ்ட் 1954) ஒரு இந்திய மாநிலங்களவை உறுப்பினர். இவர் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆவார்.[3] இவர் மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி. கே. சீனிவாசனின் மகன் ஆவார். அரசியல் வாழ்க்கைஅவர் பள்ளி நாட்களில் இருந்தே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவர் தி. மு. க அமைப்பு செயலாளரான பின்னர் மே 2009இல் வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2016 இல், மாநிலங்களவை தேர்தலில் திமுக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 ஜூன் 3 ஆம் தேதி அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . சொந்த வாழ்க்கைஇவர் தத்துவ மேதை டி. கே சீனிவாசன் மற்றும் சரஸ்வதி ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் ஆவார். 1962 இல், குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். தனது முதுகலை படிப்பை சென்னையில் முடித்த பின்னர் தனது கல்வியை தொடர அமெரிக்கா சென்றார். தொடர்ந்து அவரது ஆய்வுகள். பின்னர் அவர் இந்தியா வந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியில் சேர்ந்தார், அங்கு அவர் எம். ஜி நளினியை சந்தித்தார். அவரது திருமணம் 23 ஜனவரி 1984 அன்று நடந்தது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia