டி. கே. ராமமூர்த்தி
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி (Trichirappalli Krishnasamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளரும் வயலின் கலைஞரும் ஆவார். இவரும் எம். எஸ். விஸ்வநாதனும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1950/1960 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இசையமைத்த திரைப்படங்கள்19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவைஎம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார். விரிவான தரவுகளுக்கு - மறைவுஇவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் நாள் காலமானார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia