டுன்ட்கோவி மாகாணம்

டுன்ட்கோவி (மொங்கோலியம்: Дундговь, நடு கோவி) என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் (மாகாணங்கள்) ஒன்றாகும். இது மங்கோலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. மங்கோலியாவின் தலைநகரான உலான் பத்தூரில் இருந்து சுமார் 245 கிலோ மீட்டர் தெற்கில் இது அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மன்டல்கோவி ஆகும்.

காலநிலை

இது பெரும்பாலும் பகுதியளவு-வறண்ட புல்வெளி மற்றும் தாழ்வான மலைகளை கொண்டுள்ளது. இங்கு வெப்பநிலையானது கோடை காலத்தில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும் குளிர்காலத்தில் குறைந்தபட்சமாக -30 டிகிரி செல்சியஸ் வரையும் வேறுபடும். இங்கு மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளது.

புழுதிப் புயல்கள் மற்றும் குளிர்கால ஷுட் ஆகிய காலநிலை பிரச்சினைகள் இங்கு அடிக்கடி ஏற்படுகின்றன.

போக்குவரத்து

இந்த ஐமக்கிற்கென வணிகரீதியான வான் போக்குவரத்து கிடையாது. பொதுவான போக்குவரத்தாக பேருந்து பயன்படுகிறது. எனினும் பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வழிகள் கிடையாது. பெரும்பாலும் பயணமானது மிக்ருகள் (சிற்றுந்து) அல்லது தனியார் ஜீப்புகள் மூலம் நடைபெறுகிறது. 2013ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்ட 300 கிலோ மீட்டர் தொலைவுடைய சாலையானது இந்த ஐமக்கின் தலைநகரான மன்டல்கோவி மற்றும் மங்கோலியாவின் தலைநகரமான உலான் பத்தூரை இணைக்கிறது.[1]

பெரும்பாலான உள்ளூர் மக்கள் 250 சிசி மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளனர். அவற்றையே முக்கியமான போக்குவரத்து முறையாக பயன்படுத்துகின்றனர்.

உள்ளூர் பொருளாதாரம்

இந்த மாகாணத்தின் முக்கியமான தொழிலானது விலங்குகள் வளர்ப்பு மற்றும் கம்பளி போன்ற கால்நடை உற்பத்தி பொருட்கள் ஆகும். இந்த மாகாணமானது மங்கோலிய உள்ளூர்வாசிகள் இடையே அதன் அய்ரக்கிற்காக (புளித்த குதிரை பால்) பிரபலமாக உள்ளது. அய்ரக் என்பது ஒரு பாரம்பரிய மங்கோலிய மதுபானம் ஆகும்.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya