டெகுசிகல்பா
டெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa] முந்தைய பெயர்: எசுப்பானியம்: Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C. ஆங்கிலம்: Tegucigalpa, Municipality of the Central District) சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.[4] 1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட[5] டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.[6] ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.[7][8] புவியியலமைப்புஹொண்டுராஸ் நாட்டின் தென்-மைய உயர்நிலப்பகுதியில் 3000 முதல் 4000 அடி உயரம் வரை உள்ள மலைத்தொடரில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் அவற்றின் இடையில் வடக்கு தெற்காகச் செல்லும் சொலூதெகா ஆறு பிரிக்கின்றது.[9] பருவநிலைவெப்பமண்டலக் காலநிலையைக் கொண்டிருந்தாலும் உயரமான இடத்திலிருப்பதால் கடற்கரை மற்றும் கீழான பள்ளத்தாக்குகளை விடக்குறைவான ஈரத்தன்மையைக் கொண்டுள்ளது. நகரின் சராசரி வெப்பநிலை 19 °C (66 °F) முதல் 23 °C (73 °F) வரை உள்ளது.[10] மே-சூனும், செப்டம்பர்-அக்டோபரும் நிறைய மழைபொழிவுள்ள திங்கள்களாகும். மக்கள் பரவல்ஹொண்டுராஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பெரும் மக்கள்தொகை கொண்ட நகரம் டெகுசிகல்பா. இந்நகரில் 12 முதல் 13 இலகர மக்கள் வாழ்வதாக 2011ம் ஆண்டு கணிக்கப்பட்டது.[11] 2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன.[12] இந்நகரின் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமயத்தின் கத்தோலிக்க திருச்சபை மரபைப் பின்பற்றுபவர்கள். பொருளியல்டெகுசிகல்பாவில் வணிகம், கட்டுமானம், சேவைத்துறை, துணி, சர்க்கரை, புகையிலை முதலியவை பெரும்பொருளீட்டு மூலங்களாகும்.[13] இந்நகரின் தொழில்துறை உற்பத்திகளாக துணி, ஆடை, சர்க்கரை, ஒட்டுப்பலகை, காகிதம், மட்பாண்டம், சீமைக்காரை, கண்ணாடி, உலோகம், நெகிழி, வேதியியல் பொருட்கள், உருளிப்பட்டை, மின் கருவிகள் மற்றும் விவசாயப்பொறிகள் உள்ளன.[14] புறநகர் பகுதியில் இன்றும் வெள்ளி, ஈயம் மற்றும் துத்தநாகம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.[15] டெகுசிகல்பாவின் அகண்ட படம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia