டெஸ்லா மோட்டார்ஸ்
டெஸ்லா மோட்டார்ஸ் (ஆங்: Tesla Motors) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே தெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இது வரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. எலொன் மசுக் இதன் நிறுவனர். வரலாறுஇந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு மரத்தின் இபெர்ஹார்ட் மற்றும் மார்க் டர்பென்னிங் என்பவர்களால் நிறுவிக்கபட்டது. இவரைகளை தவிர எலோன் மசுக், ஜேபி சுட்ருபேள் மற்றும் இயன் வ்ரைட் ஆகியோரும் துணை நிறுவனர்களாக கருதப்படுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஜிம் நிறுவனம் தனது EV1 எனப்படும் வாகனத்தை தயாரிப்பிலிருந்து நிறுத்திக்கொண்டதோடு மற்றும் அழிக்கவும் செய்ததை தொடர்ந்து, இவர்களுக்கு இந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்க உந்துகோலாக விளங்கியது.[3] வாகன வடிவமைப்பு/ மாதிரிகள்டெஸ்லா நிறுவனம் கடந்த டிசம்பர் 2017 வரை மூன்றுவகையான வாகன வடிவமைப்புகளை சந்தையில் விற்பனைக்கு அறுமுகப்படுத்தியுள்ளது. இந்த் நிறுவனத்தின் முதலாம் வடிவமைப்பு Tesla Roadster தற்பொழுது விற்பனையில் இல்லை. தற்பொழுது விற்பனையில் உள்ள மாதிரிகள்; மொடல் எஸ் (Model S) , மொடல் க்ஸ் (Modal X), மொடல் 3 (Modal 3) ஆகியவை ஆகும். மொடல் எஸ் (Model S)மொடல் எஸ்-யின் தயாரிப்பு பணிகள் ஜூன் 22, 2012-யில் தொடங்க பட்டன.[4] முதற்கட்டமாக ஐரோப்பாவில் ஆகஸ்ட் 2013 ழும்பின்னர் சீனாவில் ஏப்ரல் 2014 இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் விற்பனைக்கு வந்தன. இதனை தொடர்ந்து வலதுபுறம் ஓட்டுநர் வகை வனங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியம் ஹொங்கங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 2014-ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன.[5] [6][7] இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் உலகரீதியான சில அங்கிகாரங்களை பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிட்ட தக்கது, 2013-ஆம் ஆண்டு "Motor Trend Car of the Year"[8]; "World Green Car"[9]; Automobile Magazine's 2013 "Car of the Year"[10] மற்றும் Time Magazine "Best 25 Inventions of the Year 2012"[11] ![]() மொடல் க்ஸ் (Modal X)மொடல் க்ஸ் வகை வாகனம் அலுமானனியத்தால் உருவாக்கபட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது[12]. இதன் தயாரிப்பு பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் பின்னர் 2015-ஆம் ஆண்டில்தான் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.[13] இந்தவகை வகணங்கள் 5-, 6- மற்றும் 7 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொடல் க்ஸ் வகை வாகனங்கள் செப்டம்பர் 2015 முதல் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன.[14] நோர்வே நாட்டில் இந்த வாகனம் 2016-ஆம் ஆண்டு மின்சாரத்தால் இயங்கும் முதனிலை வாகனமாக கருதப்பட்டது.[15] மொடல் 3 (Modal 3)![]() மொடல் 3 வகை வாகனம் டெஸ்லாவின் 3ஆம் தலைமுறை வடிவமைப்பாகும்.[16] ஆரம்பத்தில் 'மொடல் இ' பேரிருட படவேண்டியநிலையில் போர்ட் வாகன நிறுவனத்தின் நீதிமன்ற முறையீட்டினால் இந்த வகை வாகனத்தின் பெயர் மொடல் 3 என அறிவிக்கப்பட்டது.[17] மொடல் 3 அதிகபட்சம் 500கிமு வரை மின்சாரத்தை எட்டக்கூடிய ஆற்றல் கொண்டது.[18] 31 மார்ச் 2016 இதன் முதல் வடிவமைப்பு உலகிற்கு கட்டப்பட்ட நிலையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வாகனத்திற்கு முன்பணம் செலுத்தினர். ஜூலை 2017 வரை 500,000 பேர் இந்த வாகனதை வாங்க பதிந்து கொண்டனர்.[19] டெஸ்லா இந்த மொடல் 3 வகை வாகன உற்பத்தியில் $2 முதல் $3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.[20] முதல் 30 வண்டிகள் ஜூலை 28, 2017 நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பயனீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.[21] 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 8,182 வண்டிகள் விற்கப்பட்டன.[22] ஜனவரி 2018 தொடங்கி, மொடல் 3 வகை வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனையாகும் மின்சார வகை தணுத்துகளில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.[23] மற்ற வண்டிகள்இந்நிறுவனம் மாடல் ஒய், சைபர் திரக், தெஸ்லா செமி சரக்குந்து ஆகியவற்றின் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia