டேவிசின் நிலத்தோற்றத் தத்துவம்டேவிசின் நிலத்தோற்றக் கோட்பாடு என்பது புவியில் ஓரிட நிலத்தின் புறவடிவம் அவ்விடத்தின் பாறை அமைப்பு, அரித்தல் செயல்முறை, வளர்ச்சி நிலை ஆகியவற்றின் கூட்டுநிகழ்வால் தோன்றுகிறது என்று அமெரிக்காவின் புவிப்புறவியல் அறிஞர் டேவிசு வெளியிட்ட நிலத்தோற்றம் பற்றிய கோட்பாடு ஆகும். பாறை அமைப்பும், நிலப்புற வடிவத் தோற்றமும்பாறையின் இயல்புகள் அடிப்படைக் கட்டமைப்பு, கடினத்தன்மை, உறுதித் தன்மை, கரையும் தன்மை ஆகியவற்றைக் குறிக்கும். பாறைகள் கற்குழம்புப் பாறைகளாகவும், படிவடுக்குப் பாறைகளாகவும் அல்லது இரண்டுங் கலந்த பாறைகளாகவும் காணப்படுகின்றன. பாறைகளின் கடினத்தன்மை, உறுதித் தன்மை, நீர்புகுதல், கரைதல் போன்ற அனைத்துக் கூறுபாடுகளும் நிலப்புற வடிவத் தோற்றத்தைக் கட்டுபடுத்துகின்றன. உறுதியான பாறைகள் பழமையாக இருந்தால் எளிதில் அரிக்கப்படுகின்றன. புதிதாகத் தோன்றிய பாறைகளாலும் புவியக நிகழ்வால் மேலெழும்பும் பாறைகளாலும் கரடுமுரடான நிலப்புற வடிவத் தோற்றம் உண்டாகிறது. இதில் மென்பாறைகள் எளிதில் அழிகின்றன. அரித்தல் செயல்முறைஅரித்தல் செயல்முறை என்பது புவியின் மேல் தளத்தை அரித்து நிலப் புர வடிவத் தோற்றங்களை உருவாக்குகிற வானிலைச் சிதைவு, ஓடும் நீர், காற்று, பனிக்கட்டி, புவியீர்ப்புவிசை போன்ற புறச்செயல்முறைகளைக் குறிக்கும். அரித்தலின் செயற்கூறுகளான வானிலைச் சிதைவும் ஓடும் நீரின் அரிப்பும் இயல்பான செயல்முறைகள் எனப்படும். மித வெப்ப மண்டலத்திலும், மழைநிலப் பகுதிகளிலும் இவ்விரண்டு செயல்முறைகளும் மிக முதன்மையானவையாகும். வளர்ச்சி நிலைகடலுக்குள்லிருந்து புதியதாக ஒரு நிலம் மேலெழுந்தவுடன் அது வானிலைச் சிதைவுக்கு இலக்காகிறது. இதன் பிறகு இதில் ஆறுகள் தோன்றுவதால் நிலம் அரிக்கப்பட்டு தாழ்கிறது. சில நிலப் புற வடிவத் தோற்றங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia