டோக்கியோ பல்கலைக்கழகம்
டோக்கியோ பல்கலைக்கழகம் ([東京大学], டோக்கியோ டைகாகு, University of Tokyo) என்பது ஜப்பானில் உள்ள முக்கியமான ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும் .இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள பத்து கல்விப் பிரிவுகளில் மொத்தம் 30,000 மாணவர்கள் படிக்கின்றனர் அவர்களில் 2,100 வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம். இது ஹோங்கோ, கொமாபா, கஷிவா, ஷிரோகேனே, நாகானோ உள்ளிட்ட ஐந்து வளாகங்களைக் கொண்டிருக்கிறது. இது ஜப்பானின் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது .இது 2009 இல் உலகளாவிய பலகைக்கழகப் பட்டியலில் ஆசியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும், உலக அளவில் இருபத்து ஓராவது இடத்திலும் உள்ளது. வரலாறுஇது மெய்ஜி அரசினால் 1877 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேற்கத்திய கல்வி, மருத்துவம் ஆகியவற்றைக் கற்பித்த பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டன. இம்பீரியல் பல்கலைக்கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றது. நிலநடுக்கத்தினாலும், தீப்பற்றியமையாலும் இங்குள்ள நூலகத்தில் இருந்த ஏழு லட்சம் நூல்கள் அழிந்தன. இங்கு சீன வரலாறு, தத்துவம் தொடர்பான நூல்கள் பல இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மீண்டும் பழைய பெயரைப் பெற்றது. 1949 தொடங்கப்பட்ட புதிய கல்விமுறையின்படி, கொமாபா வளாகத்தில் முதல் இரண்டு ஆண்டுகளும், ஹோங்கோ வளாகத்தில் பிந்தைய இரண்டு ஆண்டுகளும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகின்றன. இங்கு பல ஐரோப்பிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. கிக்குச்சி டைரோக்கு எனப்படும் ஜப்பானிய கல்வியாளர் இதன் தலைவராக இருந்தவர். 1964 ஆம் ஆண்டில், கோடைகால ஒலிம்பிக்கில், இங்கு பெண்டதலான் போட்டிகள் நடத்தப்பட்டன. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் ஐம்பதிற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். 2012 ஆண்டின் முடிவில், ஆங்கிலத்திலேயே கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டது, இதன்படி, இரண்டு ஆங்கில கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்விதுறைகள்
உயர்நிலை பட்டப் படிப்புகள்
ஆய்வு நிறுவனங்கள்
இது பல தரவரிசைப் பட்டியல்களில் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் உயர் படிப்புகளுக்கான தரவரிசையிலும், உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையிலும் ஆசியாவின் முதன்மை பல்கலைக்கழகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவிலும் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் உள்ளது. உலக ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பிலும், கிழக்காசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளது. வளாகங்கள்ஹாங்கோ வளாகம்ககா மாகாணத்தில் பண்ணைக்காரர்களாக இருந்தவர்கள் மேத குடும்பத்தினர். அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் தற்போதைய வளாகம் அமைந்துள்ளது. இங்கு அதிகம் வளரும் மரம் கிங்கோ மரம் ஆகும். இதன் நினைவாக, பல்கலைக்கழகத்தின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் நிகழும் மே திருவிழா இங்கு கொண்டாடப்படும். இங்கு தோட்டத்துடன் கூடிய குளம் உள்ளது. இதனை சன்சிரோ குளம் என அழைக்கின்றனர். கொமாபா வளாகம்இங்கு கலை & அறிவியல் கல்லூரி, முதுநிலைப் பட்டதாரிகளுக்கான கலை & அறிவியல் கல்லூரி, கணிதவியல் கழகம் ஆகியன உள்ளன. துறைகளுக்கான ஆய்வகங்களும் உள்ளன. இங்கு 7000 மாணவர்கள் பொதுக் கல்வி கற்கின்றனர். மேலும், சிறப்பு பாடங்களை 450 பேரும், முதுநிலைப் படிப்பை 1,400 பேரும் கற்கின்றனர். இது டோக்கியோவின் மெகுரோ மாவட்டத்தில் உள்ளது. இங்கு 600 அமரக்கூடிய பெரிய கலையரங்கம் உள்ளது. இங்குள்ள நூலகத்தில் 5,60,000 நூல்கள் உள்ளன. மாணவர்களுக்கான உடற்பயிற்சியகம் உள்ளது. இங்குள்ள உடல்நல மையத்தில் உடல்நல சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொமாபா அருங்காட்சியத்தில் அரிய ஜப்பானிய படங்கள், மேற்கத்திய முறையில் வரையப்பட்டவை, சீன, கொரிய, ஜப்பானிய தொல்பொருட்கள் உள்ளிட்டவை காணக்கிடைக்கின்றன. இங்கு மாணவர்கள் குழுக்களும் உண்டு. முந்நூற்றுக்கும் அதிகமான மாணவர் குழுக்கள் உள்ளன. இவை வெவ்வேறு நோக்கத்தைக் கொண்டவை. ஆண்டுக்கொருமுறை, மூன்று நாட்கள் கொண்டாடப்படும் கொமாபா திருவிழா குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. இது மே மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பர். படத்தொகுப்பு
பழைய மாணவர்கள்
வகட்சுகி ரெய்ஜிரோ, [[ஒசச்சொ ஹமகுச்சி, கோக்கி ஹிரொடா, ஹிரனுமா கீச்சிரோ, கிஜூரோ ஷிடெஹரா, ஷிகேரு யோஷிடா, டேட்சு கடயமா, ஹிடோஷி அஷிடா, இச்சிரோ ஹடோயமா, நொபுசுக்கே கிஷி, எய்சக்கு சட்டோ, டகியோ புகுடா, யசுஹிரோ நகசோனே, கீச்சி மியசவா, யுகியோ கடயமா ஆகியோர் ஆவர்.
இவர்கள் தவிர, பலர் கட்டிடக்கலை நிபுணர்களாகவும், கணிதவியலாளர்களும், உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளும் வகிக்கின்றனர். மேற்கோள்கள்
மேலும் பார்க்கவும்
|
Portal di Ensiklopedia Dunia