தகவல் அறிவியல்![]() எளிமையாக கூற வேண்டும் என்றால் "தகவல் அறிவியல் என்பது தகவல்களை சேமிக்க மற்றும் மீட்டெடுப்பதற்காக செயல்முறைகள் பற்றிய ஆய்வு". தகவல் அறிவியல் என்பது அடிப்படையாக தகவல்களை பகுத்தாய்தல், சேகரித்தல், வகைப்படுத்துதல், சேமித்தல், மீட்டுதல் போன்ற பல்துறையிடைச் சார்ந்த அறிவியல் ஆகும்.[1] தகவல் அறிவியல் (தவறுதலாக) கணினி அறிவியலின் ஒரு பிரிவாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. வரலாறுதகவல் அறிவியலின் நான்கு மைல்கற்கள்
மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிதகவல் அறிவியலின் மூல ஆராய்ச்சி ஒரு திரளத்தில்(Domain) உள்ள கருத்துக்களின் அறிவு தொகுப்பாக அறியப்படுகிறது. அடிப்படைநோக்கம் மற்றும் அணுகுமுறைதகவல் அறிவியல் முதலில் தகவல் தேவைப்படுபவர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் உணர்ந்து பின்பு அதற்கேற்றாற் போல தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் செயற்படுத்துகிறது. வேறொரு வகையில் விளக்க வேண்டுமென்றால் தகவல் அறிவியல் முதலில் ஒட்டு மொத்த அமைப்பின் பிரச்சனைகளை அணுகி பின்னர் ஒவ்வொரு தனிப்பட்ட தொழில்நுட்ப விஷயங்களை அணுகுகிறது. இந்த நிலையில் தகவல் அறிவியலை தொழில்நுட்ப தீர்மானவியலுக்கான ஒரு தீர்வாகவும் பார்க்கலாம். வரையறை1968ல் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்கன் சொசைட்டியின்படி "தகவல் அறிவியல் துறை என்பது தகவலின் பண்புகள் மற்றும் தன்மை குறித்த ஆராய்ச்சி ஆகும். இது தகவல்களின் பிறப்பிடம், தொகுப்பு, அமைப்பு, சேமிப்பு, மீட்பு, விளக்கம், பரிமாற்றம், உருமாற்றம், மற்றும் பயன்பாடு தொடர்பான அறிவியல் ஆகும்."[3] பண்புகள்தகவல் அறிவியல் மூன்று பொது பண்புகளை கொண்டுள்ளன அவையாவையெனில்[4]:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia