தக்காசி இனூயி
தக்காசி இனூயி (乾 貴士 Inui Takashi?, பிறப்பு 2 சூன் 1988) சப்பானிய கால்பந்தாட்ட வீரர். இவர் எசுப்பானிய கழகமான ரியல் பெடிசிலும் சப்பான் தேசிய காற்பந்து அணியிலும் பக்கவாட்டு விளையாட்டாளராகவோ தாக்கும் நடுக்களத்தவராகவோ இருந்து வருகிறார். கழக வாழ்வுஅனைத்து சப்பான் உயர்நிலைப்பள்ளி கால்பந்தாட்டப் போட்டியில், அவரது பள்ளி சிகா யாசு உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற நிலையில், இனூயி தகுதிபெற்றவராக (Letterwinner) 2006இல் தேர்வானார்.[2] 2007இல் இனூயி யோகோஹாமா எப். மரினோசு கழகத்தில் இணைந்து ஜே லீக் டிவிசன் 1இல் விளையாடலானார். இருப்பினும் வழமையான அணிக்குத் தேர்வாகாமல் செரெசோ ஒசாக்கா அணிக்கு கடனாக அனுப்பப்பட்டார். இந்த பருவத்தின் இறுதியில் நிரந்தரமாக யோகோஹாமா அணியில் இடம் பிடித்தார்.[3] சூலை 2011இல் ஐரோப்பாவில் விளையாடத் தொடங்கிய இனூயி செருமனியின் விஎஃப்எல் போகம் கழகத்தில் இணைந்தார்.[4] சூலை 2012இல் புன்டசுலீகா கழகமான என்ட்ராகட் பிராங்க்பர்ட்டில் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia