தங்கனீக்கா ஏரி
டாங்கனிக்கா ஏரி (அல்லது தங்கனீக்கா ஏரி) ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரி ஆகும். இவ்வேரி கொள்ளளவில் உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியும் உலகின் இரண்டாவது ஆழமான ஏரியும் ஆகும். இவ்விரு கூறுகளிலும் சைபீரியாவின் பைக்கால் ஏரி முதலிடத்தில் உள்ளது.[2][3] இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு (கா.ம.கு), தான்சானியா, சாம்பியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. எனினும் ஏரியின் பெரும்பகுதி கா.ம.கு (45%), தான்சானியா (41%) ஆகிய நாடுகளிலேயே அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் காங்கோ ஆற்றில் கலந்து இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்கிறது. சொற்பிறப்பு"டாங்கனிக்கா" என்ற சொல்லுக்கு சமவெளி போன்று பரவியிருக்கும் மிகப்பெரிய ஏரி அல்லது சமவெளி போன்ற ஏரி என்பது பொருளாக குறிப்பிடப்படுகிறது."[4]:தொகுதி.இரண்டு,16 புவியியல் மற்றும் நிலவியல் வரலாறுதங்கனிக்கா ஏரியானது கிழக்கு ஆப்பிரிக்க பிளவின் மேற்கு கிளைக்கும், அல்பெர்டைன் பிளவுக்கும் இடையில் மலைச்சுவற்றின் பள்ளத்தாக்கில் அடைபட்டுள்ள நீரினைக் கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பிளவு ஏரியாகவும்,கொள்ளவில் உலகின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது. இது ஆப்பிரிக்காவின் ஆழமான ஏரியான இது உலகிலுள்ள மொத்த நன்னீரில் 16% அளவைக் கொண்டுள்ள மிகப்பெரிய ஏரியாகும். தங்கனிக்கா ஏரியானது வடக்கு தெற்கு திசையில் 676 கி.மீ (420 மைல்கள்) நீளமும் சராசரியாக 50 கி.மீ அகலத்திலும் (31 மைல்கள்) பரவியுள்ளது. இந்த ஏரி 32,900 கி.மீ.2 (12,700 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. 1,828 கி.மீ. (1,136 மைல்) தொலைவிலான கரையோர தொலைவினைக் கொண்டுள்ளது. சராசரி ஆழம் 570 மீட்டராகவும் (1,870 அடி) மற்றும் உச்ச ஆழம் 1,470 மீட்டர் (4,820 அடி) (வடக்கு பகுதி) ஆழத்தைக் கொண்டுள்ளது. இந்த ஏரியானது 18,900 கன கிலோமீட்டர் (4,500 கன மில்லியன்) கொள்ளளவைக் கொண்டுள்ளது.[5] ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி 231,000 கி.மீ. 2 (89,000 சதுர மைல்) ஆகும். இரண்டு முக்கிய ஆறுகள் ஏரிக்குள் பாய்கின்றன அத்துடன் பல சிறிய நதிகளும் நீரோடைகளும் (அதன் நீளமானது ஏரி முழுவதும் செங்குத்தான மலைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது) பாய்கின்றன. ஒரு பெரிய வெளியேறும் நதியானது லுகாகா நதி ஆகும். இது காங்கோ ஆற்று வடிநிலப் பகுதிக்குள் நுழைகிறது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ரூசிசி நதி ஏரியில் பாயும் முக்கிய நதி ஆகும், இது கியுவா ஏரியிலிருந்து ஏரிக்கு வடக்கே நுழைகிறது. தான்சானியாவின் இரண்டாவது பெரிய ஆறான மலகாரசி நதி, டங்கானிக்கா ஏரியின் கிழக்குப் பகுதியில் நுழைகிறது. மலகராசி ஏரி தங்கனீக்காவை விடவும் பழமையானது இந்த ஏரி தோன்றுவதற்கு முன்பு காங்கோ நதியுடன் நேரடியாக கலந்து கொண்டிருந்தது. இந்த ஏரியானது அதன் உயரமான அமைவிடம், பெரிய ஆழம், காலநிலை மாற்றங்கள் நிறைந்த கொந்தளிப்பான எரிமலை நிலப்பகுதி, மெதுவாக நிரம்பும் ஏரி அமைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் ஆகியவற்றின் காரணமாகவும் மாறுபடும் பாய்வுப் பாங்கு ஆகியவற்றால் ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது. கடந்த காலங்களில் அரிதாகவே கடலுக்கு செல்லும் வழிந்தோட்டம் நிகழ்வுகள் இருந்தன. கடலுக்கான இந்த இணைப்பு, ஏரியானது உயர் மட்டளவைத் தாண்டும் போது லுங்காங்காவின் வழியாக காங்கோவிற்குள் ஏரியிலிருந்து நீரைக் கடக்க அனுமதிக்கிறது. ஏரி உயர்ந்த ருக்வாவிலிருந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது, ஏரி மலாவிக்கு அணுகல் மற்றும் நைலை நோக்கி ஒரு வெளியேறும் பாதை அனைத்தும் ஏரியின் வரலாற்றில் சில இடங்களில் இருந்திருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது.சில நேரங்களில் வெவ்வேறு உட்பாயும் மற்றும் வெளிச்செல்லும் நீர்ப்பாதைகளைக் கொண்டுள்ள தங்கனீக்காவிற்கு உயர் மட்டத்தில் இருக்கும் ருக்வா ஏரியிலிருந்து நீர் வரத்து உள்ளது. இது மலாவி ஏரிக்கான அணுகல் மற்றும் நைல் நதியை நோக்கி ஒரு வெளியேறும் பாதையும் ஒரு சில இடங்களில் இருந்திருக்ககூடும் என்பது போன்றவை ஏரியின் வரலாராக முன்மொழியப்படுகிறது.[6] தங்கனீக்கா ஏரியானது ஒரு பழமையான ஏரியாகும். மிகக் குறைவான நீரின் அளவுகளில் தனித்தனி ஏரியாகக் காணப்படுகின்றன. இவை மூன்றும் வெவ்வேறு வயதுடையவை. மையத்திலுள்ள ஏரியின் பகுதியானது சுமார் 9-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், வடக்கு பகுதியானது 7-8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் மற்றும் தெற்குப் பகுதியானது 2-4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றியதாக அறியப்படுகிறது.[7] தீவுகள்தங்கனீக்கா ஏரியில் பல தீவுகள் அமைந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை
தண்ணீர் பண்பியல்புகள்தங்கனீக்கா ஏரியின் நீரானது காரத்தன்மை வாய்ந்தது.பூச்சியம் முதல் நூறு மீட்டர் (0-330 அடி) ஆழத்தில் ஏரி நீரின் அமில காரத் தன்மையானது 9 ஆகும். அதற்குக் கீழே கிட்டத்தட்ட 8.7 என்ற அளவில் உள்ளது. இந்த அளவானது படிப்படியாக குறைந்து ஏரியின் ஆழமான பகுதிகளில் 8.3-8.5 ஆக உள்ளது.[8] மின் கடத்துத்திறன் இந்த நீரில் காணப்படுகிறது. இந்த அளவானது உயரமான பகுதியில் 670 μS/செ.மீ என்ற அளவிலும் ஆழமான பகுதியில் 690 μS/செ.மீ என்ற அளவிலும் உள்ளது.[8] ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏரியின் தென்பகுதி மேற்பரப்பு வெப்பநிலை வீச்சு பொதுவாக 24 °C (75 °F) தொடங்கி பிந்தைய மார்ச்-ஏப்ரல் மழைக்காலங்களில் 28–29 °C (82–84 °F) வரை உள்ளது. 400 மீட்டர் (1,300 அடி) மிகையான ஆழத்தில் வெப்பநிலையானது 23.1–23.4 °C (73.6–74.1 °F) என்ற அளவில் மிகவும் நிலையாக உள்ளது.[9] இந்த ஏரியில் பருவகால கலவை பொதுவாக 150 மீ (490 அடி) ஆழத்திற்கு அப்பால் நீடிப்பதில்லை. பருவ கால மாற்றங்கள் 490 அடியைத் தாண்டி தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. இந்த பருவகால கலப்பு நிலை முக்கியமாக தெற்கில் மேல்நோக்கிய காற்று-உந்துதல் செயல்பாடு குறிப்பிட்ட அளவிலும் கீழ்ப்பகுதி ஏரியில் நீட்சியடைகிறது.[10] ஏரியின் அடிப்பகுதியில் புதைபடிம நீர் காணப்படுகிறது.[11] ஏரியின் ஆழப்பகுதிகளில் உயிர்வளி (ஆக்சிசன்) காணப்படுவதில்லை (உயிரகக் குறைபாடுடைய). இத்தகைய தகவமைப்புகளால் மீன் உள்ளிட்ட காற்றுச் சுவாச நீருயிரிகள் ஏரியின் மேல் மட்டத்தில் வாழ கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இது ஏறக்குறைய 100 மீட்டர் (330 அடி) ஏரிகளின் வடக்கு பகுதியிலும் மற்றும் 240-250 மீ (790-820 அடி) தெற்கிலும் இந்த வரம்பில் சில புவியியல் மாறுபாடுகள் கானப்படுகின்றன. ஆக்ஸிஜன் குறைபாடுள்ள ஆழ்ந்த பகுதிகள் அதிக அளவு ஹைட்ரஜன் சல்பைடு நச்சு வாயுக்கள் காணப்படுகின்றன.[12][13] இது பாக்டீரியாவைத் தவிர மற்ற உயிரிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும்.[2][8] உயிரியல்ஊர்வனதங்கனீக்கா டீரி மற்றும் அதனோடு தொடர்புடைய ஈரநிலப்பகுதிகள் நைல் முதலைகள் வாழும் பகுதிகளாக உள்ளன. பல்வேறு வகையான நன்னீர் ஆமை இனங்கள் கானப்படுகின்றன.[14] இந்த ஏரியில் வாழும் மீன்களை உண்ணும் இயல்புடைய இந்த ஏரியில் மட்டுமே வாழக்கூடிய தண்ணீர் நாகப்பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் இந்த ஏரியில் இருக்கும் கரையோர பாறைகளில் வாழக்கூடியதாக இப்பாம்புகள் உள்ளன.[14][15] மற்ற முதுகெலும்பிலிகள்கடல் அட்டைகள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட மற்றும் பல அறியப்பெறாத முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் இந்த ஏரியில் காணப்படுகின்றன.[16] கடற்பாசிகள், கடற்பஞ்சுகள், சொறிமுட்டை போன்ற உயிரினங்களும் காணப்படுகின்றன. தொழில்கள்![]() ஏரியைச் சுற்றிலும் உள்ள பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் 25-40% புரதத் தேவைகளை இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் பூர்த்தி செய்கின்றன.[17] தற்பொழுது கிட்டத்தட்ட 800 மீன்பிடித் தளங்களில் இருந்து சுமார் 100,000 பேர் மீன்படித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஏரியானது சுமார் 10 மில்லியன் மக்களின் வாழ்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. தங்கனிக்கா ஏரியின் மீன்களானது கிழக்கு ஆப்ரிக்கா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1950 களின் நடுப்பகுதியில் வணிகரீதியான மீன்பிடி தொழில் இப்பகுதியில் தொடங்கியது இதனால் கடலின் மீன் வகைகளில் மிக அதிக தாக்கத்தை உள்ளூர் மீன்பிடித் தொழில் ஏற்படுத்தியது; 1995 ஆம் ஆண்டில் இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்களின் மொத்த எடையானது 180,000 டன்களாக இருந்தது. போக்குவரத்துதங்கனீக்கா ஏரியின் கிழக்கு கரையில் இரண்டு விசைப்பொறி படகுப்போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. லியெம்பா படகானது கிகோமா முதல் புளுங்கா இடையிலும் ம்வொன்கோசோ படகுப்போக்குவரத்தானது கிகோமா முதல் புஜூம்புரா வரையிலும் நடைபெறுகிறது. கங்கோமா துறைமுக நகரம் தான்சானியாவில் தார் எஸ் சலாம் தொடருந்து நிலையத்திலிருந்து தொடங்கும் தண்டவாளத் தலையாகும். கலாமி துறைமுக நகரம் (முன்பு ஆல்டிபர்ட்வில்லி என்றழைக்கப்பட்டது) டி. ஆர் காங்கோ தொடருந்து வலைப்பின்னலுக்கான தண்டவாளத் தலையாகும்.சாம்பியாவின் துறைமுக நகரமான முப்புளுங்கு ஒரு உகந்த பாதையாக உள்ளது.[18] 2014 ஆம் ஆண்டு திசம்பர் 12 ஆம் நாள் முட்டம்பலா விசைப்பொறி படகானது தங்கனீக்கா ஏரியில் மூழ்கியதில் 120க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயினர்.[19] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia