தங்கம் மூர்த்தி

தங்கம் மூர்த்தி

தங்கம் மூர்த்தி தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.

குடும்பம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19 ஆகஸ்டு 1964இல் பிறந்தார். இவரது தந்தை கே.கே.தங்கம், தாய் ஜெயலட்சுமி.

துறைகள்

சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியாளர் என்ற நிலையிலும் இவர் அரும்பணியாற்றிவருகிறார். சுமார் 10 கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவருடைய கவிதைகள் இலக்கிய மட்டும் பட்டிமன்ற மேடைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டுவருகின்றன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடத்திட்டத்தில் உள்ளன. இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பெற்ற விருதுகள்

இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் காக்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நூல்கள்

  • கவிதை வெளியினிலே [1]
  • முதலில் பூத்த ரோஜா, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
  • பொய்யெனப் பெய்யும் மழை, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
  • தங்கம் மூர்த்தியின் கவிதைகள், வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
  • மழையின் கையெழுத்து (ஆங்கில மொழி பெயர்ப்புடன்), நிவேதிதா  822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003
  • கவிதையில் நனைந்த காற்று (கவியரங்கக் கவிதைகள்)

ஆதாரங்கள்

  1. புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் நூல்கள் வெளியீட்டு விழா
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya