தங்க ஒதுக்கீடுதங்க ஒதுக்கீடு அல்லது தங்க இருப்பு (gold reserve) என்பது வைப்பாளர்கள், நாணயம் வைத்திருப்பவர்கள் (எ.கா. வங்கித்தாள்), வணிபப் பங்காளர்கள் போன்றோருக்கு செலுத்துவதற்காக உத்தரவாத சேகரிப்புப் பெறுமதியாக அல்லது நாணயத்திற்கான பாதுகாப்பாக ஒரு தேசிய நடுவண் வங்கி வைத்துள்ள தங்கம் ஆகும். 2011 இறுதி கணக்கெடுப்பின்படி, எல்லா தங்கச்சுரங்கங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட மொத்த தங்கங்களின் அளவு 171,300 டன்கள் ஆகும்.[1] 12 ஏப்ரல் 2013 இல் திரோயளவை அவுன்சு (1 திரோயளவை அவுன்சு 31.1035 கிராம்) ஐ.அ$ 1,500 என்ற விலையில் இருந்தது. அதன்படி டன் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ஐ.அ$ 48.2 மில்லியனாகவிருந்தது. ஆகவே மொத்த தங்கத்தின் பெறுமதி ஐ.அ$ 8.2 ரில்லியனைத் தாண்டிக் காணப்பட்டது.[note 1] இருந்தாலும், தற்போதைய மொத்த தங்கத்தின் அளவு பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஏனென்றால் தங்கம் ஆயிரம் வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. இன்னுமொரு காரணம் சில நாடுகள் மொத்த தங்கத்தின் அளவை வெளியிடுவதில்லை. அத்துடன், சட்ட விரோதமாக எடுக்கப்படும் தங்கத்தின் அளவினைக் கணக்கிடுவது கடினமானது.[2] இவற்றையும் பார்க்ககுறிப்புகள்
{ gold, silver, & other precious metals & gems are weighed by the troy ounce, 12 troy ounces = 1 pound not 16 to 1 in most other normal weights, so there would be 24,000 troy ounces to a ton of weight } உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia