தங்க சாலைதங்க சாலை (Mint (facility) என்பது உலோக நாணயங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையைக் குறிக்கும்.[1] வரலாறுமுதன் முதலில் நாணயம் தயாரித்தவர்கள் கிரேக்கர்கள். கிரேக்க நாட்டிலிருந்து இத்தாலி, பாரசீகம், இங்கிலாந்து முதலிய நாடுகளுக்கு இக்கலை பரவியது.[2] இந்தியாவில் தங்க சாலைஇந்தியாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தங்க நாணயங்கள் இருந்தன. இந்தியாவில் பல இடங்களில் பண்டைக்கால நாணயங்கள் கிடைக்கின்றன.[3] புத்தர் காலத்தில் (கி.மு.6ஆம் நூற்றாண்டு) முத்திரையிட்ட நாணயங்கள் வழங்கி வந்தன. நவீன தங்க சாலைகள் முதன் முதலில் மும்பையிலும் கொல்கத்தாவிலும் 1825-ல் நிறுவப்பட்டன. கொல்கத்தாவில் 1962-ல் வேறொரு புதிய தங்க சாலையை நிறுவினர். இது உலகத்திலேயே இரண்டாவது பெரிய தங்க சாலையாகும். நாட்டில் வேறு சில இடங்களிலும் தங்க சாலைகள் உள்ளன. தங்க சாலையில் நடைபெறும் வேலைதங்க சாலையில் நடைபெறும் வேலை மிகவும் முக்கியமானது.நாணயங்களை மிகவும் துல்லியமாகச் செய்ய வெண்டும். ஒவ்வொரு வகை நாணயமும் குறிப்பிட்ட உலோகத்தாலோ, உலோகக் கலவையாலோ குறிப்பிட்ட அளவிலும், வடிவிலும், எடையிலும் இருக்க வேண்டும் என அரசாங்கம் நிர்ணயிக்கிறது. அதன்படி நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. நாணயங்கள் செய்யப் பயன்படும் உலோகங்களைப் பரிசோதிக்கும் பகுதியும், நாணயங்களைத் தயாரிக்கும் பகுதியும், கள்ள நாணயங்களைச் சோதிக்கும் பகுதியும் தங்க சாலைகளில் உண்டு. மேற்கோள்கள்
மேலும் சில ஆதரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia