தச்சர்

ஒரு இடைக்கால தச்சரின் கருவிகள், c. 1465

மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சர்எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார்.

பயன்படுத்தும் சாதனங்கள்

உளி, சுத்தி, வாள், ஆணி, துளைக்கருவி (துரப்பணம்), அரம், இழைப்புளி, கீற்றுளி, திருப்புளி, மூலைமட்டம், கொட்டாப்புளி, எண்ணெய்க்கல் (உளி தீட்ட), போன்றவை.

தச்சரின் வகைகள்

மரவேலை செய்யும் தச்சர், நகை வேலை செய்யும் தச்சர் (இதில் நகை வேலை செய்பவர்களை தட்டார், பத்தர் என்ற பெயர்களிலும் அழைப்பர்), இரும்பு வேலை செய்யும் தச்சர் எனப்படுவர் (இதில் இரும்பு வேலை செய்யும் தச்சரை கருமார் என்ற பெயரில் அழைப்பர்.

பழங்காலத்தில் தச்சர்

பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சர்கள் வெறும் உளி, சுத்தி பயன்படுத்தி வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya