தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோயில் என்பது தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] இறைவன், இறைவிஇங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர், இறைவி ஆனந்தவல்லி கோயில் அமைப்புமூலவர், அம்மன் சன்னதி விமானங்கள் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறத்தில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், இடப்புறத்தில் ஐயப்பன் சன்னதியும் உள்ளன.திருச்சுற்றில் ஏழு லிங்க பானங்கள், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். அடுத்து பஞ்ச முக ஆஞ்சநேயர் சன்னதி அம்மன் சன்னதி, வாகனங்கள், நவக்கிரக சன்னதி ஆகியவை உள்ளன. கோயிலின் முன் மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்து செல்லும்போது கருவறைக்கு முன்பாக இரு துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறைக்கு முன்பாக ஒரு நந்தி உள்ளது. கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர். கருவறையில் தஞ்சபுரீஸ்வரர் உள்ளார். மூலவர் கருவறையின் முன்பாக வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி அருகே பள்ளியறை உள்ளது. அம்மன் சன்னதிக்கு நேர் எதிராக திருச்சுற்றில் நந்தியும், பலிபீடமும் உள்ளன. அம்மன் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். மூலவர் தேவகோட்டத்தில் துர்க்கையம்மன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, நடராஜர் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த கோயில் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்தது. குடமுழுக்கு11.9.2000இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது. 6 பிப்ரவரி 2022இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. [3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia